கடலூர்: புதுச்சேரி மற்றும் நாகை இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனை லாபகரமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் பல நாட்களாக கனரக வாகனங்களை வலிமறுத்துக் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து மயிலாடுதுறைக்கு சரக்குகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் காளிமுத்துவை வலிமரித்து அவரை அறிவாளால் வெட்டி காயப்படுத்தி விட்டு அவரிடம் இருந்து செல்போன் மற்றும் ரொக்க பணங்களை திருடி சென்றுள்ளனர். பின்பு அவரைத் தொடர்ந்து மற்றொரு லாரியில் வந்த மணிமாறன் என்பவரை வழிமறித்து அவரையும் அறிவாளர்கள் வெற்றி அவரிடமும் செல்போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்துவிட்டு ஓடிவிட்டனர்.
மேலும் அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன.கடலூர் மாவட்டத்தில் இதுபோன்று பல்வேறு குற்ற செயல்கள் பல நாட்களாக நடந்து வருகின்றது. இந்த சம்பவம் குறித்து கடலூர் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து அவர்களை தீவாரமாக மாவட்டம் முழுவதும் தேடி கொண்டு வந்துள்ளனர். இதன் பின் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் ஆறு பேர் கொண்ட கொள்ளையர்கள் இருப்பதாக போலீசுக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
துரிதமாக செயல்பட்ட காவல்துறை அந்தப் பகுதிக்கு சென்று அவர்களை சுற்றி வளைத்தது ஐந்து பேரை கைது செய்தது. மேலும் கொள்ளையர்களில் ஒருவனான விஜய் இரண்டு காவலரின் மண்டையை உடைத்து விட்டு தப்ப முயன்ற போது தற்காப்புக்காக விஜய்யை என்கவுண்டர் செய்தது காவல்துறை. இவருக்கு வயது 19 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது இருபதுக்கு மேற்பட்ட குற்ற வழக்குகளும் உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக காவல்துறை சமாளிக்க முடியாமல் சட்ட ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர கொள்ளையர்கள் மட்டும் ரவுடிகளை என்கவுண்டர் செய்து வருகின்றனர்.