ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் சத்து கம்மியாக இருப்பார்கள். இல்லையெனில் சோர்வாக இருப்பார்கள் என்று அசால்டாக இருந்துவிடக் கூடாது என்று ஒரு மருத்துவ குழு எச்சரித்துள்ளது. ஊட்டச்சத்து என்பது பெரியவர்களை காட்டிலும் சிறிய குழந்தைகளுக்கு அத்தியாவசியமான ஒன்று. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஊட்டச்சத்து நிறைந்த சாப்பாடு முறையை உண்ண பலரும் தவறி விடுகிறோம்.
இதனால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டால், குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போவதோடு மட்டுமல்லாமல் புற்றுநோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டினால் டிஎன்ஏவில் முதலில் தாக்கம் ஏற்படும். சத்து குறைந்த டி என் ஏவால் அவர்களின் உடம்பு நோயை எதிர்த்து போராட மறுத்து விடும். பெரும்பாலான புற்றுநோய்க் குழந்தைகளுக்கு இந்த அதித ஊட்டச்சத்து குறைபாடு ஆனது, உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்து குறைபாட்டினால் புற்றுநோயை எதிர்த்துப் போராட குழந்தைகள் உடம்பில் துளியும் தெம்பு இருக்காது.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளும் போது, குழந்தைகளின் டிஎன்ஏ வில் ஆக்டிவிட்டி அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் உடம்பை தானாக சரி செய்து கொள்ள அவர்கள் உடம்பில் திறன் இருக்கும். இந்த குறைபாட்டினால் ஹச்பி வி மற்றும் இ பி வி ஆகிய தொற்றுகளினால் பெரும்பாலும் புற்றுநோய் ஏற்படுகின்றது. இதனால் குழந்தைகளுக்கு விட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவு பொருட்களை உணவுமுறை மூலம் கொடுத்து வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது மருத்துவ குழு.