இந்த ஆண்டுக்கான ipl தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஹைதராபாத் மற்றும் லக்னோ இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் லக்னோ அணி டாஸ் வென்றது. டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்யும் என எதிர் பார்த்த நிலையில் லக்னோ அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்தது ஹைதராபாத் அணி.
ஹைதராபாத் அணி முதல் பேட்டிங் செய்து 190 ரன்கள் எடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கை நிர்ணயித்தது. இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 32 ரன்களும் எடுக்க கடைசியாக களமிறங்கி அனிகேத் வர்மா 13 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார் மற்ற பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இரண்டாவது களமிறங்கிய லக்னோ அணி தொடக்க வீரர் மார்க்ரம் டக் அவுட் ஆக அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் நிகோலஸ் பூரன் சிச்சர் மழை பொழிய வைத்துள்ளார். தொடந்து சிக்சர் பவுண்டரி என ஹைதராபாத் மைதானத்தை பவுலர்களை சுற்றி காட்டினார். அவருடைய அதிரடியான ஆட்டத்தால் 26 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். 18 பந்துகளில் அரைசதம் விளாசி இந்த ஆண்டு ipl இல் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் 16.1 ஓவரில் இலக்கை அடைத்து லக்னோ அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. வலிமையான அணி என்ற ஹைதராபாத் தோல்வியை தழுவியது.