CRICKET: நேற்று லக்னோ மற்றும் ஹைதராபாத் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி அபார வெற்றி.
நடபிபெற்று வரும் ipl போட்டியில் நேற்று லக்னோ மற்றும் ஹைதராபாத் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் ஹைதராபாத் அணி 300 ரன்களை கடக்கும் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் லக்னோ அணி அபாரமாக விளையாடி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இணை சிறப்பாக தொடங்க அபிஷேக் ஷர்மா 6 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் டக் அவுட் ஆனார்.
20 ஓவர் முடிவுபெற்ற நிலையில் ஹைதராபாத் அணி 190 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி அதிரடியாக விளையாடி 16.1 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. லக்னோ அணியில் நிகோலஸ் பூரன் அதிரியாக விளையாடி 25 பந்துகளில் 70 ரன்களில் விளாசி இருந்தார். இந்த வெற்றியில் மூலம் lsg அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது .