கிரிக்கெட்: நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் லக்னோ இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் லக்னோ அனி தோளில் குறித்து பல கருத்துக்கள் எழுந்து வருகின்றன.
நேற்று லக்னோ மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 13வது போட்டியான லக்னோ மற்றும் பஞ்சாப் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்கியது. போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்றது. பௌலிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என லக்னோனி இலக்கை நிர்ணயித்தது.
இதில் அதிகபட்சமாக லக்னோ அணியில் நிக்கோலஸ் பூரன் 44 ரன்கள் ஆயுஷ் பதொனி 41 ரன்கள் எடுத்திருந்தன. பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 16.2 ஓவரில் 177 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி தொடர் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. நடைபெற்ற மூன்று போட்டிகளில் லக்னோ அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று இரண்டு போட்டியில் தோல்வி தழுவியுள்ளது.
கடந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்ததை லக்னோ அணியின் உரிமையாளர் கே எல் ராகுலை மைதானத்தில் வைத்து பேசிய வீடியோ வைரலானது. இந்த ஆண்டு முதல் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து ரிஷப் பண்ட்டிடம் கோயாங்கா பேசுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்களும் பாவம் பண்ட் அவர் நிலைமை என்ன ஆகப் போகிறதோ என விமர்சித்து வருகின்றன.