cricket: நேற்று நடைபெற்ற போட்டியில் கடந்த வருடம் நடந்த சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்கியுள்ளது லக்னோ அணி.
நடந்து வரும் ipl தொடரில் நேற்று ஹைதராபாத் மற்றும் லக்னோ இரு அணிகளும் மோதின. இந்த போட்டியில் லக்னோ அணி முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 190 ரன்கள் எடுத்தது. அதில் அதிகபட்சமாக ஹெட் 47 ரன்கள் எடுத்தார். லக்னோ அணியில் அதிகபட்சமாக ஷர்த்துல் தாகூர் ௪ விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய லக்னோ அணி இந்த இலக்கை 16.1 ஓவரில் ஆட்டத்தை முடித்து வைத்தனர்.
இந்த போட்டிக்கு பின் ஒரு சம்பவம் நடந்ததை நினைவுபடுத்தி பலிவாங்கியுள்ளது லக்னோ அணி. கடந்த ஆண்டு நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்து 165 ரன்கள் அடித்தது. அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 9.4 ஓவரில் இலக்கை எட்டி இதுவரை எந்த அணியும் பதிவு செய்யாத வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்த போட்டிக்கு பின் தான் கோயங்கா கே எல் ராகுலை திட்டி அவர் இந்த அணியை விட்டு வெளியேறிய சம்பவம் எல்லாம் நடந்தது.அதற்கு பழிவாங்கும் விதமாக லக்னோ அணி இந்த முறை அதிரடியாக விளையாடி இலக்கை 16.1 ஓவரில் ஆட்டத்தை முடித்து வைத்துள்ளது. நிகோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் விளாசி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த இந்த போட்டியானது விரைவில் முடிக்கப்பட்டது.