முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றொரு தொடர் கடிதம் ஒன்றை தொண்டர்களுக்கு எழுதி வெளியிட்டுள்ளார். சோவியத் யூனியன் என்கின்ற மாபெரும் ஒன்றியம் செயல்பட்டு வந்தது. அது பல்வேறு மொழிகள் பேசும் தேசிய பரிணாமங்களைக் கொண்டிருந்தது. அதில் ரஷ்ய மொழி ஆதிக்கத்தை செலுத்தியதனால், சோவியத் யூனியன் இருக்கும் இடமே காணாமல் போனது. அதற்கு ஒரு முக்கிய காரணம் மொழி திணிப்புதான்!!
மொழி திணிப்பால் பிளவு பட்ட தேசங்களின் வரலாறு நம் பக்கத்திலேயே இருக்கின்றன. கிழக்கு வங்காளத்தினர் இணைந்து தனது மொழி தேசிய மொழி என்று அறிவிக்க, பாகிஸ்தானிடம் முறையிட்டு தொடர்ந்து மொழி உறுதி மொழியை முன்வைத்து வந்தனர். 1971இல் அவர்களுக்கு இடையேயான போர் உச்சத்தை கண்டது. அச்சமயத்தில் வங்கதேசத்தினரை பிரதிநிறுத்தி இந்திய இராணுவ படையினரும் பாகிஸ்தானை எதிர்த்து போராடி வந்திருந்தனர். அப்போது இந்தியாவிலேயே அதிக வரி வசூல் செய்து கொடுத்த மாநிலமாக தமிழ்நாடு கலைஞர் ஆட்சியில் பெருமை கண்டது.
நம் தாய்மொழி போலவே மற்றவர்களின் தாய் மொழியையும் மதிக்கிறோம். ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும் நம் சகோதர! சகோதரிகளே! இந்தி மொழி திணிப்பை 1945, 1980 அதனைத் தொடர்ந்து தற்சமயம் 2025இல் பெருமளவு நடைபெறுகிறது. இந்தி திவஸ் என்று செப்டம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது. மேலும், கனடாவிலும் இந்தியை எதிர்த்து போராடி வருவதை நாம் சமூக வலைதளங்களில் காண்கிறோம். பேரறிஞர் அண்ணாவின் வழியில் தான் நாங்கள் பின்பற்றுகிறோம். ஆட்சி மொழியில் தொடர்ந்து வஞ்சகம் காட்டுவது மத்திய அரசுதான் என்று கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.