கடந்த ஓராண்டிற்கு மேலாக மகளிர் உரிமை தொகை தமிழகத்தில் வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகின்றது. அப்பொழுது பல்வேறு தரப்பட்ட மகளிர்களும் இதற்காக அப்ளை செய்து இருந்தனர். அதில் பலரும் தகுதியற்றவர்கள் என்று ரிஜெக்ட் செய்யப்பட்டிருந்தனர். அதன் பிறகு தேர்வானவர்களுக்கு மாத மாதம் ரூபாய் ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்திருந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இதன் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று மார்ச் 14 தாக்கல் செய்யப்பட்ட ரூ. நிதிநிலை அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகைக்காக ரூபாய் 13,807 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
இதற்கு ஏற்கனவே ரிஜெக்ட் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தற்சமயம் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பின், புதியதாக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பங்கள் வெளியிடப்பட உள்ளன என்றும் தெரிவித்திருந்தார். இதற்கான தகுதி குறித்து இப்பொழுது காண்போம். குடும்பத்தின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்கும் மேல் இருக்கக் கூடாது. குடும்ப உறுப்பினர்களுக்கு பென்ஷன் மற்றும் இதர உதவி தொகைகள் எதுவும் வழங்கப்பட்டு வந்தால் இதற்கு எலிஜிபிளாக முடியாது. என்னதான் இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும் அடுத்த வருட தேர்தல் வருவதையொட்டி, கட்சி முன்னேற்றம் போன்ற காரணங்களால் இப்பொழுது பெண்கள் இதற்கு முயற்சி செய்தால் நிச்சயமாக அவர்களுக்கு தேர்வாக அதிக வாய்ப்பு அதிகம் உள்ளது என்ற ஒரு சர்வேயும் உள்ளது. அடுத்தடுத்த தேர்தல் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இதற்கு ரிஜெக்ட்டான விண்ணப்பதாரர்களும் பெரும்பாலும் மீண்டும் விண்ணப்பிக்க வலியுறுத்தப்படுகின்றது.