கலைஞர் மகளிர் திட்டம் நடப்பாச்சியின் மிக வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவரவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை மேலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி விரிவுபடுத்தும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு அதன் மூலம் கூடுதல் பயனளர்கள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட உள்ளனர்.
வருகின்ற ஜூலை 15ஆம் தேதி முதல் வீடு தேடி உங்களுடன் ஸ்டாலின் என்கிற முகாம்கள் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கோரியும், திமுக ஆட்சியின் வெற்றிகர செயல்பாடு குறித்தும் எடுத்துரைக்க உள்ளனர். இந்த விண்ணப்பம் முழுக்க முழுக்க மிக விரைவாக செக் செய்யப்பட்டு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வங்கிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும். முன்பு இருந்த கட்டுப்பாடு இப்பொழுது கிடையாது. நான்கு சக்கர வண்டி வைத்திருப்பவர்களுக்கும், வீட்டில் ஏற்கனவே ஓய்வூதியம் பெறும் முதியவர் இருக்கும் நிலையில் அந்த வீட்டில் மற்றொரு பெண் இல்லத்தரசியாக அல்லது 21 வயது பூர்த்தியடைந்த நிலையில் அவர்களது வருமான சான்றிதழ் செக் செய்யப்பட்டு அவர்களும் இணைக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கான கடைசி தேதி நவம்பர் மாதம் 14ஆம் தேதி என்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் உங்கள் வீடு தேடி வரவில்லை என்றால் அருகில் முகாம்கள் இருக்கும் இடத்தை தேடி சென்று உரிய தகவலை பதிவிட்டு ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற தேவைப்படும் சான்றுகளை சேர்த்து சமர்ப்பிக்கலாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.