தமிழக அரசு, வீட்டில் எண்ணம் பொழுதும் அயராது உழைக்கும் மகளிருக்காக மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் சரி செய்யப்பட்டு தகுந்த மகளிரை தேர்ந்தெடுத்து மகளிர் பட்டியலை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பொழுது பல குடும்பங்கள் ரேஷன் கார்டு வாங்காமல் இருந்திருந்தனர். இப்பொழுது சில குடும்பங்கள் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனியே புது ரேஷன் கார்டு அப்ளை செய்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் புதிதாக இணைந்த புது ரேஸன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்துள்ளது.
அனைத்து பெண்களும் பயன்படும் வகையில் திமுக அரசு புதிய வழிமுறையை வலியிறுத்தி உள்ளது. இதற்கு சில விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் விதித்துள்ளது. கீழ்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி புதிய ரேஷன் கார்டு அட்டைதாரர்களும் இந்த மகளிர் உரிமைத் தொகையில் இணையலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை ஆரம்பித்த பிறகு புதியதாக ரேஷன் கார்டு அப்ளை செய்தவர்கள், இதுவரை கூட்டுக்குடும்பத்தில் இருந்து விட்டு இப்பொழுது தனியே புது அட்டை அப்ளை செய்தவர்கள், முன்பு விண்ணப்பிக்க தவறியவர்கள், மேலும் ஏற்கனவே விண்ணப்பித்து அந்த ஆவணம் நிராகரிக்கப்பட்டு இருந்தவர்கள், மேலும் மின்சாரத்தை ஒரு வருடத்திற்கு 3600 யூனிட்டுக்கு கம்மியாக பயன்படுத்தும் குடும்பத்தினர், குடும்ப ஆண்டு வருமானம் ரெண்டரை லட்சத்துக்கு கம்மியாக உள்ளோர் ஆகியோர் தற்சமயம் மகளிர் உரிமை தொகைக்கு அப்ளை செய்யலாம் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் முன்பு வாய்ப்பை நழுவ விட்டவர்கள் இதை பயன்படுத்தி இந்த உரிமைத் தொகை செயல்பாட்டில் இணையலாம்.