இளம் வயதில் ஓய்வு பெறும் முக்கிய வீரர்கள்!! இதற்கான காரணப் பின்னணி என்ன??

Major players retiring at a young age

கிரிக்கெட்: டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி கொண்டு வரும் பேட்ஸ்மேன்கள் திடீரென அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது இதற்கான பின்னணி என்ன?

உலகில் நடைபெற்று வரும் கிரிக்கெட் லீக் போட்டிகளில் அதிகமாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் லீக் போட்டி இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி சிறப்பாக முடிந்த நிலையில் பெங்களூர் அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் அடுத்தடுத்து முக்கிய அதிரடி ஜாம்பவான் வீரர்கள் தனது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்து வருகின்றனர்.

இவ்வகையான ஓய்வு அறிவிப்புகள் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணம் குறைவான வயதில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள் திடீரென ஓய்வை அறிவித்து சர்வதேச போட்டிகளில் இருந்து வெளியேறுவது தான். சில நாட்களுக்கு முன்பாக தென்னாப்பிரிக்கா வீரர் ஹென்றிச் கிளாசின் திடீரென அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையிலும் இவ்வாறு ஓய்வு அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் தற்போது இன்று காலை அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

29 வயதே ஆகும் பூரன் திடீரென ஓய்வு அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு திடீரென ஓய்வு அறிவிக்க காரணம் அவர்கள் லீக் போட்டியில் அதிக சம்பளத்திற்கு விளையாடுவது என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் அவர்கள் எதிர்பாராத அளவிற்கு அதிக சம்பளம் கிடைப்பது தான் முக்கிய காரணம் என கூறி வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram