cricket: இந்தியா மற்றும் நியூசிலாந்து இறுதி போட்டியில் மொத உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னால் வீரர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இறுதி போட்டி நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளும் கோப்பையை வெல்ல வேண்டும் என்று புது புது யுக்திகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னால் வீரர் ரவி சாஸ்திரி இறுதி போட்டியில் ஆட்டநாயகன் யார் என்பது குறித்தும் பிட்ச் குறித்தும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இறுதி போட்டி நடக்கவிருக்கும் மைதானம் சற்று தோய்வாக தான் இருக்கிறது. அது நிச்சயம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்காது. இரு அணிகளும் வலிமையான சுழற்பந்து வீச்சாளர்களை வைத்துள்ளனர். இந்திய அணியில் அக்சர் படேல் ஜடேஜா மற்றும் வருண்,குல்தீப் என வலிமையான சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துகிறது. இரு அணிகளுமே இறுதி போட்டிக்கு தங்கள் அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மேலும் இந்த போட்டியை பொறுத்த வரை ஒரு ஆல்ரவுண்டர் தான் ஆட்டநாயகன் விருதை தட்டி செல்வார். அது இந்திய அணியில் அக்சர் படேல் அல்லது ஜடேஜா. மேலும் நியூசிலாந்து அணியில் பிலிப்ஸ் அல்லது சான்ட்னர், பிலிப்ஸ் சிறந்த வீரர் அவர் பேட்டிங், பீல்டிங் என சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் பந்து வீச்சிலும் அவர் விக்கெட்டை வீழ்த்துகிறார். இந்திய அணி அதற்கு ஏற்றவாறு தயாராக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.





