திஸ்பூர்: மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதால் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் 40 லிட்டர் பாலை வாங்கி குளித்து கொண்டாடிய இளைஞர். பிரபலங்கள் தொடங்கி அனைவரது மத்தியிலும் விவாகரத்து என்பது சாதாரணமாகி விட்டது.
வளர்ந்து வரும் காலகட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து பெறுவது அதிகரித்து விட்டது. விவாகரத்து என்பது சிக்கலான விஷயம். இதிலிருந்து மீள்வதற்கு சில காலம் எடுத்துக் கொள்கின்றனர் தம்பதிகள். ஆனால் இங்கு விவாகரத்து பெற்றதை சுதந்திர நாளாக எண்ணி கொண்டாடுகிறார் ஒரு இளைஞர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த மாணிக் அலி என்பவர் விவாகரத்து பெற்றதை சுதந்திர நாளாக எண்ணி 40 லிட்டர் பாலை வாங்கி கொண்டாடியுள்ளார். விவாகரத்து பெற்றதால் விடுதலை கிடைத்து விட்டதாக எண்ணி கொண்டாடியுள்ளார். விடுதலை கிடைத்து விட்ட போது அவரது முகத்தில் இருந்த மகிழ்ச்சியை யாராலும் மறக்க முடியாது என கூறப்படுகிறது.
இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. மாணிக்காலில் தனது வீட்டின் வெளியே நாலு வாளிகளில் பாலை நிரப்பி வைத்து ஜக்கில் எழுத்து தன் மீது ஊற்றி குளித்து உள்ளார். மற்றவர்களைப் போல அல்லாது இந்த விதத்தில் தனது சுதந்திரத்தை கொண்டாடியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என் மனைவிக்கு காதலன் ஒருத்தன் இருக்கிறான் காதலனுடன் அடிக்கடி ஓடிப் போய்விடுவாள், மனைவியை மீட்டு வருவதே எனக்கு வேலையாகி போனது, குடும்ப கௌரவத்திற்காக இத்தனை நாள் பொறுத்திருந்தேன். இதற்கு முன்னர் இரண்டு முறை காதலுடன் சென்றுவிட்டார்.
மேலும், காதலனுடனே இருக்க விரும்புகிறார் என்றும், சட்டப்படி விவாகரத்து தர முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். மாணிக் நேற்றுதான் விவாகரத்து இறுதியானதாக வழக்கறிஞர் கூறியதால் என் சுதந்திரத்தை கொண்டாட பாலில் குளிக்கிறேன் என்று வீடியோ பதிவில் கூறியுள்ளார்.