அன்னூர்: கொங்கு நாட்டில் உள்ள மிகப் பழமையான ஆலயம் அன்னூர் மண்ணீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவில் யுகம் யுகமாக சிறப்பு பெற்று விளங்கியதாக கூறப்படுகிறது.
கோயில் கிருதா யுகத்தில் “வன்னியூர்” என்ற பெயருடன் விளங்கியது. இங்கு தோன்றிய “வண்ணிலிங்கத்தை” நான்முகன் வழிபட்டதாகவும் வரலாறு உள்ளது. பின்பு திரேதா யுகத்தில் இந்த ஊர் வாணியூர் என்று அழைக்கப்பட்டது. அங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான் வானிலிங்கம் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
மேலும் துவாபர யுகத்தில் திருக்கோயில் அமைந்த ஊர் வள்ளியூர் என்று அழைக்கப்பட்டது. இங்கு அமைந்த “வள்ளி” லிங்கத்தை மார்க்கண்டேய முனிவர் பூஜை செய்து வழிபட்டு வந்தார்.
தற்போது கலியுகத்தில் “அன்னியூர்” என்று அழைக்கப்பட்ட ஊர் தற்போது மருவி “அன்னூர்” என்று அழைக்கப்படுகிறது. மேலும் கோயில் காணப்படும் கல்வெட்டுகளில் “அன்னியூர்” என்றும் “மன்னியூர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்கோயிலில் உள்ள மன்னீஸ்வரர் அரிய சிவலிங்கத்தின் திருமேனியில் காட்சியை தருகிறார். மேலும் திருக்கோயில் மேற்கு பார்த்த சன்னதி. திருக்கோயில் சென்று வணங்கினால் மனக்கவலை விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இந்த அன்னூர் கோயிலில் பெருமையை கோவிலில் உள்ள சுவர்களில் இருக்கின்ற கல்வெட்டுகளும் சிற்பங்களுமே வெளிக்கொண்டு வருகின்றன. மேலும் இத்திருக்கோவில் தஞ்சையில் உள்ளது போல மிகப்பெரிய சுயம்பு மூர்த்தி உள்ளதால் இக்கோயில் “மேற்றலை தஞ்சாவூர்” என்றும் அழைக்கப்படுகிறது. அன்னூர் கர்நாடகத்தின் கேரள இனைக்கின்ற சாலையில் உள்ளதால் அன்னூர் வளம் செழிக்கும் ஊராக இன்றளவும் விளங்கி வருகிறது.
மேலும் இங்கு அருள் பாலிக்கும் பைரவர் மிகவும் பழமையான மூர்த்தி. அதேபோல் மூலவரின் சன்னதியில் தெற்கு புறமாக ஆலமர் செல்வனான தட்சணாமூர்த்தியின் திருமேனி மிகப் பழமையானது. ஒவ்வொரு ஆண்டின் குருப் பெயர்ச்சியின் போதும் லட்சார்ச்சனை நடைபெறுகிறதது. மேலும் அம்பிகை கோயில் பின்புறமாக உள்ளது அம்பிகையே “அருந்தவ செல்வி” என்று அழைக்கப்படுகிறார்.
மேலும் அம்மன் கோயில் புதிதாக ஒரு பள்ளியறை கட்டப்பட்டுள்ளது இந்த அம்பிகை பெயர் அருந்தவம் செய்து இறைவனை அடைந்தால் என்று கூறப்படுகிறது .அன்றைய தினத்தில் திருக்கோயிலில் பெண்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
புடைப்பு சிற்பங்களாக சிறிய அளவில் சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான் பெருமாளும் கைலாயம் செல்லும் காட்சியும் மற்றும் முதலையுண்ட சிறுவனை சுந்தரர் மீட்கும் காட்சி ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றும் பள்ளிகொண்ட பெருமாள் பிள்ளையார் முருகனாகியோர் அழகான திருவுருவ சிலைகளும் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தில் தானியங்களை சேமிக்கும் கிடங்குகளும் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாக்கும் காப்பரைகளும் இருந்ததாக தெரிகிறது.
பழைய கல்வெட்டுகல் படி பழங்காலத்தில் கொங்கு நாட்டிலேயே இந்த கோவிலுக்கு தான் அதிக அளவு நிலம் தானம் செய்யப்பட்டுள்ளதாக தெரிந்துள்ளது. இந்த அன்னூர் திருக்கோயில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. கோயிலில் தமிழ் வருடப்பிறப்பு நவராத்திரி ஐப்பசி அன்னாபிஷேகம் திருக்கார்த்திகை திருவாதிரை மற்றும் சிவராத்திரி நாட்களில் மிகச்சிறப்பாக திருவிழா நடத்தப்படுகிறது. மற்றும் மாத விழாக்களில் பிரதோஷமும் கார்த்தியும் அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள்
கிருத்திகை தோறும் சுவாமி திருவீதி உலா வள்ளி தெய்வானை முருகன் பவனி வருவதை காணலாம் அன்று இரவு அன்னதானமும் நடக்கும். மேலும் மார்கழி மாதம் திருவாதிரை 10 நாள் உற்சவத்தின் போது கலை அம்சம் பொருந்திய 32 அடி உயர மரத்தில் உற்சவர் ஸ்ரீ மண்ணீஸ்வரர் வீதி உலா வரும் காட்சியைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.
இத்திருக்கோயிலுக்கு கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அன்னூர் கோவை, சத்தியமங்கலம், அவிநாசி, ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்து அன்னூரை பேருந்தில் சென்று அடையலாம்..