தமிழக அரசு பட்ஜெட் இன்று தாக்கல்!! கோவில் தேவாலயங்களுக்கு மானியம்!!

manneeswarar-temple-that-solves-marital-problems-a-shiva-temple-that-has-been-worshipped-for-ages

*தமிழக பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூபாய் 3500 கோடி மதிப்பில் ஊரகப்பகுதிகளில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் .

*மேலும் சென்னை அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் மற்றும் நகர்புற சதுக்கங்கள் பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளும் புதிய நகரில் அமையும்.

*மஞ்சள் நகரமான ஈரோட்டில் நொய்யல் அருங்காட்சியகம் அமைக்க 22 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.

*தமிழகத்தில் புதிதாக 6500 கிலோ மீட்டர் நீள சாலைகள் அமைக்க ரூபாய் 2200 கோடி நிதி ஒதுக்கப்பட்டது

*அரசு திட்டங்களின் கீழ் வாழும் ஏலியிலே மக்களுக்காக கட்டித் தரப்பட்ட பழுதடைந்த வீடுகள் தற்போது சீரமைக்க முடியாமல் இருக்க காரணத்தினால் அவர்களுக்கு புதிதாக வீடு கட்டி தரப்படும் எதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு சுமார் 25 ஆயிரம் புதிய வீடுகள் வரை கட்டித் தரப்படும் என்று கூறியுள்ளார்.

*மேலும் சென்னையில் சீரான குடிநீரை விநியோகிக்க ரூபாய் 20423 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*தமிழகத்தில் உள்ள 2676 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் 500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி தரத்தை உயர்த்த 65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*40 வயதிற்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனைக்காக அட்டை வழங்கப்படும்.

*சுற்றுச்சூழலுக்காக வேடந்தாங்கல் ஆராய்ச்சி மையத்திற்கு ஒரு கோடி ஒதுக்கீடும் கடல்சார் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு 50 கோடி ஒதுக்கீடு. மற்றும் திருவான்மியூர் பாலவாக்கம் முத்தண்டி குலசேகரப்பட்டினம் கீழ் புதுப்பட்டு சாமியார் பேட்டை கடற்கரைகளுக்கு புவிசார் நீலக்குடி சான்றிதழ் பெற முயற்சி.

*உதகையில் 70 கோடியில் எழில் மிகு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

*ஆயிரம் வருடம் பழமையான திருக்கோயில்களுக்கு திருப்பணிக்காக 125 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

பழமையான பள்ளிவாசல் தற்காக்கள் *தேவாலயங்களை சீரமைக்க 10 கோடி மானியம் வழங்கப்படும்.

*மீனவர்களுக்கு மீன் பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு 8000 மானியம் வழங்கப்படும் மூன்று ஆண்கள் பழமையான விசைத்தறிகளை மேம்படுத்த 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

*குமரி நாகை உள்ளிட்ட மீனவ பகுதிகளில் மீன் பிடி விசைப்படகுகள் நிறுத்தும் தளம் உள்ளிட்ட உட்கட்டமைப்புக்கு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.

*ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும்..

*வரும் நிதியாண்டில் 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram