விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த ப்ரோமோ வெளியாகி பிரபலமாகி வருகிறது. ஒரு பக்கம் ரோகினியின் மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரர் ரோகினியை பார்க்க கடைக்கு வந்துள்ளார். அவர் அப்போது என் சொந்தக்காரருக்கு கல்யாணம். அதான் உங்க கடையில கட்டில் பீரோ எல்லாம் வாங்க வந்தேன் என்று கூறியுள்ளார். அந்த சமயம் பார்த்து முத்து அவரது அப்பா அண்ணாமலையோடு ஷோரூம் வருகிறார். இவர் கடைக்குள் ஹெல்மெட் மாட்டி தன்னை மறைத்துக் கொள்கிறார். அதனைப் பார்த்து முத்து சந்தேகமாக கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்.
மற்றொருபுறம் மருந்து வாங்க சென்ற மனோஜ், அவரை 30 லட்சம் ரூபாய் ஏமாற்றிய கதிரை பார்த்து விடுகிறார். கதிர் காரை நிறுத்து என்று அவர் கார் பின்னே ஓடுகிறார். எதிரே வந்த வண்டி ஒன்றில் அடிபட்டு அதிலுள்ள கண்ணாடி செல் அவர் கண்ணில் குத்தி பயங்கர காயம் ஏற்படுகிறது.
ரோகினி விஜயாவுக்கும் மனோஜ்க்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்னு கால் பண்றாங்க. மனோஜ் கண்களில் கட்டோடு, ரோகினி இடம் இனிமேல் நான் யார் தயவு இல்லாமல் வாழ முடியாது என்று வருத்தமாக கூறுகிறார். அப்படி சொல்லாதீங்க மனோஜ் நான் இருக்கேன் என்று ரோகினி ஆறுதல் கூறி அவரது தலையில் முத்தமிடுகிறாள். ஏற்கனவே எவ்வளவு அடிபட்டாலும் விஜயாவுக்கு சேவை செய்து வரும் மீனா, இனிமேல் மனோஜ்க்கும் சேவை செய்வாரா! என்று பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.