மும்பை: மராத்தா இட ஒதுக்கீடு குறித்து உண்ணாவிரதப் போராட்டத்தை மனோஜ் ஜராங்கே ஆதரவாளர்கள் மேற்கொண்டு உள்ளனர். ஜராங்கே ஆதரவாளர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டா சமூகத்தினர் கல்வி ரீதியாக மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்பினராக அறிவித்திருந்தது மற்றும் அவர்களது கல்வி வேலைவாய்ப்பில் 16 % இட ஒதுக்கீடு தரவும், கடந்த 2018 ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியானது. ஆனால் நீண்ட காலமாக இந்த அறிவிப்புகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது. தங்களது இட ஒதுக்கீடு குறித்து சில ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜராங்கே இட ஒதுக்கீடு குறித்து தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதற்கு முன்னர் அடிக்கடி போராட்டத்தை நடத்தி வந்துள்ளார். ஆனால் தற்போது நடத்தப்பட்டு வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் மும்பையை ஸ்தம்பிக்க செய்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் 17ஆம் தேதி வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக ஆங்கில ஊடகமான பி டி ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
சத்ரபதி சம்பாஜி நகரில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் அமைந்துள்ள அதர்வாளி சாரதி கிராமத்தில் மராட்டா சமூக தலைவர் மனோஜ் போராட்டத்தை தொடங்கியுள்ளார். போராட்டம் தொடங்கி 9 நாட்களாகிய நிலையில் இன்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். ஒன்பது நாட்களில் சாப்பிடாமலும், நீர் அருந்தாமலும், மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளாமலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால் ஜராங்கே உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
8 வது நாளில் நேற்று உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் எழுந்து அமர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று ஜராங்கே ஆதரவாளர்கள் வலியுறுத்திய நிலையும் தனது போராட்டத்தை விட்டு விலகாது இருந்தார். உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார் மனோஜ் ஜராங்கே.