கடந்த சில வருடங்களாகவே ஏறுமுகமாகவே பல்வேறு அதிர்ச்சிகளைத் தந்துள்ள தங்கத்தின் விலை ஆனது கடந்த மூன்று நாட்களாக சிறிதளவு சரிவு கண்டுள்ளது. இந்த சரிவு பின்னால் ஏற்படும் தங்கத்தின் விலையில் உச்சத்தை குறிக்கிறதா என்ற அச்சமும் மக்களிடையே காணப்படுகிறது. இன்றைய தங்கம், வெள்ளி நிலவரத்தை பின்வருமாறு காண்போம். இன்றைய நிலவரப்படி, 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 8,662. இது நேற்றைய விலையை விட ரூபாய் 22 குறைவாக விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரத்தின் விலையானது ₹.69,296. இது நேற்றைய விலையை விட 176 ரூபாய் குறைந்துள்ளது.
22 காரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை ₹.7940. இதன் நேற்றைய ஒரு கிராமின் விலை ரூபாய் 7960 ஆகும். 22 காரட் தங்கத்தின் ஒரு பவுனின் விலை ₹.63,520. இது நேற்றைய விலையை விட 160 ரூபாய் குறைவாக காணப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்றையது போலைவே ₹.105 ஆக விற்கப்படுகிறது. இன்றைய நாளை தங்கம், வெள்ளி வாங்குபவர்கள் பயன்படுத்திக் கொண்டால் அவர்களுக்கு லாபம் சிறிது கிடைக்கும். ஆனால் பங்குச்சந்தைகளில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த சரிவு ஏற்கத் தகாததாக அமைகிறது.