மார்ச் ஒன்றாம் தேதி இன்றைய எபிசோடில் மீனா, ஸ்ருதியிடம் இவர் யாரையோ துரத்திகிட்டு போயிருக்காரு! அப்புறம் தான் ஆக்சிடென்ட் ஆயிருக்கு என்று கூறுகிறார். இது வேறயா மீனா என்று ஸ்ருதி ஆச்சிரியத்துடன் சொல்கிறாள். ஆமா ஸ்ருதி நாங்க இப்பதான் அவர்களுக்கு பணம் கொடுத்துட்டு வரோம் என்று சொல்கிறார். அவருக்கு கண்ணு சரியாயிடுமா என்று கேட்க இல்ல க்ரிட்டிக்கல் டாக்டர் சொல்லிட்டாங்க என்று ஸ்ருதி கூறுகிறாள். அப்போது டாக்டர் வர, விஜயா என் பையனுக்கு என்ன ஆச்சு டாக்டர்! கண்ணு தெரியுதா! என்று கேட்கிறார். அதற்கு நர்ஸ் குறுக்கிட்டு, டாக்டர் இப்போதான் ஆபரேஷன்
முடிந்து வந்திருக்காரு. பேஷண்ட போய் டிஸ்டர்ப் இல்லாம பாருங்க என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள். டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று கூறியும் குடும்பத்தோடு அழுது கொண்டு மனோஜிடம் பேசுகிறார்கள். மனோஜ் எமோஷனலாக அம்மா! நீ என்ன சின்ன வயசுல கண்ணு கண்ணுன்னு கூப்பிடுவியே அம்மா! இப்பொழுது இந்த கண்ணால உன்னை பாக்க முடியலயே அம்மா! என்று கூறுகிறார். ரோகிணி அப்படி சொல்லாத மனோஜ் நான் கூட என் கண்ணை தந்து உன்னை பார்க்க வைக்கிறேன் என்று கூறுகிறாள். அவருடைய அப்பா அண்ணாமலை அழுக முத்து ஆறுதல் கூறுகிறார்.
எல்லாரையும் ஸ்ருதி அவர் முன்னாடி அழுகக்கூடாது என்று டாக்டர் சொல்லி இருக்காங்களா! அவர் முன்னாடி அழுதா இன்னும் தான் அவருக்கு கஷ்டமா இருக்கும் என்று திட்டுகிறார். பின்னர் டாக்டர் வந்து எல்லாரையும் வெளியில போக சொல்லிட்டாங்க. முத்து, மீனாவிடம் வெளியில் ஏற்கனவே மனோஜ் ரொம்ப பயந்தவன். இப்ப ரொம்ப பயப்படுறான் என்று வருத்தப்படுகிறார். வாங்கங்க பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போயிட்டு வருவோம் என்று முத்துவை அழைத்துக் கொண்டு மீனா செல்கிறாள். கோயிலுக்கு போக கீழே வரும்போது, எதிர்க்க மனோஜால அடிபட்ட போலீஸ் தலையில் கட்டு போட்டுக் கொண்டுள்ளார்.
முத்துவிடம் சில போலீஸ் வந்து விசாரிக்க அவர் என் அண்ணன் தான் என்று கூறி என்னவென்று கேட்கிறார். மனோஜிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறவும், அவரை அழைத்துக்கொண்டு மனோஜ் கிட்ட போறாங்க! அங்கு வந்த போலீசார் மனோஜிடம் நீ யாரை துரத்திட்டு போன! என்று கேட்க, கதிர் என்று பதிலளிக்கிறார். அண்ணாமலை தலையிட்டு, உன்கிட்ட காசு வாங்கி ஏமாத்திட்டு போனானே அந்த கதிரா! என்று கேட்கிறார். அதற்கு ஆமாம் என்று கூறுகிறார். முந்தி அடித்துக்கொண்டு முத்து நீ அவன பாத்தியா! நம்பர் பிளேட் பார்த்தியா? எனச் சரமாரியாக கேள்விகள் தொடுக்கிறார்.
போலிஸ் அவரை அமைதியாக இருக்கும் படி சத்தம் போட்டு, மனோஜிடம் அவர் எங்கே பார்த்தீங்க! எப்போ பார்த்தீங்க! என்று ஸ்டேட்மெண்ட் வாங்கி எழுதிக்கொண்டு கிளம்புகிறார்கள். அதன் பிறகு டாக்டர் ஆபரேஷன் செய்ய 75 ஆயிரம் ரூபாய் ஆகும். உடனே கட்டுங்க என்று கூறிவிட்டு செல்கிறார். மனோஜோட மனைவி, அவங்க அம்மா எல்லாம் எங்க போனாங்கன்னு தெரியல! முத்துவும், மீனாவும் வழக்கம்போல் முந்திக்கொண்டு பணத்தை தயார் செய்ய முற்பட்டுள்ளனர். அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் பணம் கேட்டு கால் செய்து வருகின்றனர். அவர்கள் 35 ஆயிரம் ரூபாய் ரெடி செய்து விடுகிறார்கள். அண்ணாமலை ஏதோ மூன்றாவது மனிதன் போல், பணம் பத்தலையா நான் வேணும்னா தரவா! என்று கேட்கிறார்.
அதற்கு இந்த கொடையாளிகள் வேண்டாம் என்று மறுத்து வெளியே ரூபாய் அரேஞ்ச் செய்ய கிளம்பி விடுகிறார்கள். விஜயா அதற்கு மேல். பெற்ற பிள்ளை அடிபட்டு கிடக்கின்றது கூட எண்ணாமல் இந்த மீனா எங்க போனான்னு தெரியல! என் பிள்ளை இங்கே அடிப்பட்டு கிடக்கான். இன்னைக்கு கூட பூ கட்ட போகணுமா! எதுவும் சமைச்சு வச்சுட்டு போகல! வீட்ல உள்ளவங்க எல்லாம் எப்படி சாப்பிடுவாங்க! என்று தொடர்ந்து மீனாவை குற்றம் சாட்டுகிறார். அண்ணாமலை அவரை முரைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.