இந்த மாத ஆரம்பம் முதலே சிறு சரிவை சந்தித்தாலும், தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது தங்கத்தின் விலை. தற்சமயம் 24 காரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 70 ஆயிரத்தையும் தாண்டி வருகின்றது. தொடர்ந்து இதன் உயர்வால் மக்கள் கல்யாண முறை, மொய் மற்றும் சீர்வரிசைகளில் நகை செய்வதற்கு பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இன்றைய நிலவரப்படி, 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.8782. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 11 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 70,256. இதன் நேற்றைய விலை ₹. 70,168. கிட்டத்தட்ட 88 ரூபாய் வித்தியாசத்தில் விற்கப்படுகிறது.
22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.8050. இத நேற்றைய விலை ரூபாய் ₹8,040. பத்து ரூபாய் வித்தியாசத்தில் கிராமிற்கு விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹.64,400. இதன் நேற்றைய விலை ₹.64,320. 80 ரூபாய் வித்தியாசத்தில் விற்கப்படுகிறது. வெள்ளி விலை 108.10 ரூபாயாக விற்ற நிலையில், தற்சமயம் 10 பைசா கம்மியாகி 108 ரூபாயாக இன்று விற்கப்படுகிறது. எனவே கிலோவிற்கு ரூபாய் 100 குறைந்து விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் சற்று ஏறுமுகமாகவே உள்ள நிலையில், எப்பொழுது இது பல் மடங்காகும் என்று தெரியாது. எனவே பொதுமக்கள் வெள்ளியில் சேமிப்பு தொடங்கி உள்ளனர்.