மார்ச் 12 இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில், விஜயாவிற்கு சிந்தாமணியிடம் இருந்து கால் வருகிறது. போனில் இனிமேல் மீனா டெக்கரேஷன் பக்கமே தலை வைக்க முடியாது. அவளுக்கு இரண்டு லட்ச ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளேன் என்று கூறுகிறார். துளியும் அக்கறை காட்டாமல் விஜயா சந்தோசப்படுகிறார். அவள் வேலைக்கு சென்றால் எனக்கு மரியாதை தர மாட்டாள் என்று கூறிக்கொண்டே சந்தோஷத்தில் போனை வைக்கிறாள். கொஞ்ச நேரத்தில் ரவிக்கு போன் செய்து ரெஸ்டாரண்டில் இருந்து விதவிதமாக ஃபுட் வீட்டுக்கு கொண்டு வா என்கிறார் விஜயா. ரவி என்னம்மா இவ்வளவு சந்தோசம். அண்ணி சாப்பாடு செஞ்சா வேஸ்ட் ஆயிடுமே என்று கூறுகிறார். அதெல்லாம் நான் அவளை சமைக்க வேணாம் என்று சொல்லிவிடுகிறேன். நீ வாங்கிட்டு வா என்று போனை வைத்து விடுகிறார். இதனை ரவி ஸ்ருதியிடம் சொல்ல, முத்து மீனாவிற்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால்தான் அத்தை இவ்வளவு சந்தோசமாக இருப்பாங்க என்கிறாள் ஸ்ருதி. ரவி அதுவும் சரிதான் என்று அம்மாவை சந்தேகப்படுகிறார்.
ஒருபுறம் மீனா, மண்டப ஓனரை சந்தித்து ஏமாந்ததை எடுத்துக் கூற அவர் மேனேஜரை அழைத்து விசாரிக்கிறார். மேனேஜர் நான் காண்ட்ராக்ட்ல கையெழுத்து வாங்கிட்டு தான் ரூபாயை கொடுத்து விட்டேன். இவங்க புருஷன் குடிகாரன். அவன் எங்கிட்டாவது தொலைச்சிருப்பான். இவங்க நம்மகிட்ட திரும்ப வந்து கேக்குறாங்க என்று அளந்து விடுகிறார். அவர் கூறியதைக் கண்ட ஓனர் காரில் ஏறி சென்று விடுகிறார். மீனா பயத்தில் கத்தி புலம்புகிறாள். வீட்டிற்கு சாப்பாடு உடன் வந்த ரவி அம்மாவை பார்த்து என்னமா விஷயம் என்று கேட்கிறார். விஜயா ஒண்ணும் இல்லை என்று எல்லாரையும் சாப்பிட அழைக்கிறார். மீனா சோகமாக வருவதை கண்ட ஸ்ருதி, அவரிடம் விசாரிக்க அவர் ஒன்றும் இல்லை என்று மலுப்பி விடுகிறார். சாப்பாடு சாப்பிடும் போது கூட உம்முன்னு இருக்கிறார் மீனா. இதை கவனித்த ரோகிணி விஜயாவிடம் என்னவென்று கேட்க, விஜயா நடந்ததை கூறிய பின், ஒண்ணுமே செய்யாத அவங்களையே இந்த பாடு படுத்துறாங்க. நம்மள பத்தி தெரிஞ்சா அவ்வளவுதான் என்று மனதில் புலம்பிக்கொள்கிறாள். ஸ்ருதி மீண்டும் விசாரிக்க அவர் மீண்டும் ஒன்றும் இல்லை என்று கூறி செல்கிறார். மீனா தூங்கும் போது, நடந்ததை முத்துவிடம் கூறிய பின் அவர் சென்று மேனேஜரை அடிப்பது போல் கனவு காண்கிறார். இதனால் டக்கென்று எழுந்து, முத்துவிடம் விஷயத்தை கூறக்கூடாது என்று முடிவு எடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.