சமீபமாக தொடர்ந்து தங்கம் விலை ஆனது ஏறுமுகமாக அமைந்துள்ளது. இது எட்டாத உயரத்தை சமீப காலமாகவே தொட்டு வருகின்றது. பலரும் நகை சீட்டு மூலம் சிறுக சிறுக சேர்த்து தங்கத்தை வாங்க முற்படுகின்றனர். செய்கூலி சேதாரம் ஆகியவற்றை கணக்கிட்டு தங்கத்தை வாங்குவதற்குள் நடுத்தர வர்க்கத்திற்கு பெரும் போராட்டமே நிகழ்ந்து விடுகிறது. தங்கத்தின் விலை பலருக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றது என்பது மிகவும் உண்மை. இன்றைய நிலவரப்படி, 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.8,858. இதன் நேற்றைய விலை ₹.8798. இது கிராமிற்கு 60 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுனின் விலை ₹.70,864. நேற்றைய விலையை விட 480 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.8,120. இது நேற்றைய விலையை விட 55 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ₹.8065. இதன் ஒரு பவுனின் விலை ₹.64,960. இது நேற்றைய விலையை விட 440 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட ரூபாய் ஆயிரம் கூடுதலாக விற்கப்படுகிறது. தற்சமயம் அனைவரும் வெள்ளி சேகரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இது எப்பொழுது தங்கத்தை போல உயரும் என்ற முனைப்போடு இவ்வாறு செயல்படுகின்றனர்.