இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா முத்துவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். முத்துவிடம் நாளைக்கு பணம் கிடைத்தவுடன் செட்டில் செய்து விடுவேன் என்று கூறி சமாளிக்கிறார். மனம் தாங்காமல் அம்மா வீட்டிற்கு சென்று மீனா புலம்புகிறார். உனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதுன்னு தெரியல என்று அம்மா புலம்புகிறார். அவர் உனது ரெகுலர் கஸ்டமரின் ஹஸ்பண்ட் போலீஸ்தான அவர்கிட்ட போய் பேசு என்று ஐடியா கொடுக்கிறார். சத்யாவை கூட்டிக்கொண்டு, அவரைப் பார்க்க செல்கிறாள் மீனா. போலீசார் உன் புருஷன் தான் முரடுனு நினைச்சா நீ என்னம்மா! இப்படி ஏமாந்துட்டு வந்து நிக்கிற! இதனை அன் அபிஷியலாக நான் டீல் பண்ணுகிறேன் என்று கூறி செல்கிறார். கம்ப்ளைன்ட் கூட கொடுக்க முடியாது என்கிறார். வெளிவந்த பிறகு சத்யாவிடம் புலம்பிக் கொண்டு இருக்கிறார் மீனா. நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று பேசிக் கொண்டிருக்க, முத்துவிடம் இருந்து மீண்டும் போன் வருகிறது. அமௌன்ட் வந்துருச்சா என்று கேட்க, இல்லைங்க நாளைக்கு தரேன்னு சொல்லி இருக்காங்க என்று மீண்டும் கூறுகிறார். இதைக்கேட்ட முத்து நீ கவனமாக இரு என்று எச்சரிக்கிறார். பின் மீனாவின் குரல் டல்லாக இருப்பதை அறிந்து என்ன ஆச்சு உனக்கு என்று கேட்கிறார். ஒன்னும் இல்லங்க டயர்டாக இருக்கு என்று சொல்லி மழுப்பி போனை கட் செய்து விடுகிறார்.
பின் சத்யாவிடம் நான் வீட்டுக்கு போய் சமைக்கணும் என்று கூறி கிளம்ப, அவர் எப்பவுமே நீ உன்ன பத்தி யோசிக்க மாட்டியா என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். வீட்டிற்கு வந்த மீனாவை பார்த்த விஜயா, இவ்வளவு நேரம் கழிச்சு வந்தா எப்படி சமைப்பாய் என்று கேட்க, இன்னைக்கு மாமாவுக்கு சமைக்கிற உணவையே நீங்களும் சாப்பிடுங்க! என்னால உங்களுக்கு தனியாக சமைக்க முடியாது என்று கூறுகிறார். ஏன் சமைக்க முடியாது என்று கத்தி கேட்க, உங்களுக்கு தெரியாதா என்று பதிலடி கொடுக்கிறார். எனக்கு எதுவும் தெரியாது என்று மழுப்ப, உங்க ஸ்டூடண்டுக்கு கால் பண்ணி கேளுங்க சொல்லுவாங்க என்று கூறும்போது, அண்ணாமலை மீனா என்று கூறிக்கொண்டு கையில் பிரட்டுடன் வீட்டுக்கு வருகிறார். என்ன மாமா இது என்று கேட்க, நாம எவ்வளவு அந்த அண்ணாச்சி கிட்ட ஜாமான் வாங்கி இருக்கிறோம். நேற்று ஜாமான் வாங்கிட்டு சில்லறையாக கிழிஞ்ச நோட்டை கொடுத்திருந்தாரு. போய் கேட்டதற்கு இது நான் கொடுக்கல என்று அடித்து சொன்னார். இன்று அதே நோட்டை ஒட்டி அவரிடமே கொடுத்து தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன் என்று கூறுகிறார். நீங்களாக இப்படி செஞ்சீங்க! என்று விஜயா ஆச்சரியத்துடன் கேட்க, தப்பு பண்றவங்களுக்கு அவங்க பாஷையில தான் ரிட்டன் கொடுக்கணும் என்கிறார். மீனாவிற்கு இதைப் போல தான் நாம் செயலாற்ற வேண்டும் என்று ஒரு யோசனை வருகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.