தங்கத்தின் விலை ஆனது சமீப காலமாகவே பெரும் உச்சத்தை தொட்டு வருகின்றது. அதுவும் நேற்றைய நிலவரப்படி, நூறு ரூபாய் வித்தியாசத்தில் கூடுதலாக விற்கப்பட்டிருந்தது. நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றது. மேலும் இதனை பலரும் நகைச்சீட்டு அல்லது சேமிப்பின் மூலம் வாங்கி சேமித்து வைக்க முற்படுகின்றனர். இன்றைய நிலவரப்படி, 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,967. இது நேற்றே விலை ₹.8,978. பதினொரு ரூபாய் விலை கம்மியாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுனின் விலை ரூ. 71,736. பவுனிற்கு 88 ரூபாய் வித்தியாசத்தில் குறைவாக இன்று விற்கப்படுகிறது.
சென்னை நிலவரப்படி, 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,220. இதன் நேற்றைய விலை ரூ. 8,230. கிராமிற்கு பத்து ரூபாய் வித்தியாசத்தில் குறைவாக விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் விலை ரூ. 65,760. இது நேற்றைய விலையை விட 80 ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. ஏறும்போது மட்டும் நூறு ரூபாய் வித்தியாசத்தில் ஏற்றப்படுகிறது. இறங்கும்போது பத்து ரூபாய் வித்தியாசத்தில் குறைக்கப்படுகிறது. மீண்டும் எவ்வளவு வித்தியாசத்தில் ஏறும் என்ற அச்சத்திலேயே மக்கள் இதை தீவிரமாக சேர்க்க முற்படுகின்றனர். வெள்ளி ஒரு கிராம் விலை ரூ.112. இது நேற்றைய விலைக்கு சமமாக விற்கப்படுகிறது. இருப்பினும் இது சற்று ஏறுமுகமாகவே உயர்ந்து வருகின்றது. இதன் ஒரு கிலோவின் விலை ரூ. 1,12,000.