கடந்த ஒரு வாரம் ஆக சிறிது சரிவை கண்டுள்ள தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் அதன் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த சனிக்கிழமை மாற்றம் அடைந்திருந்த தங்கத்தின் விலை இன்று வரை சமமாக உள்ளது. அதன்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.8662. ஒரு பவுனின் விலை அதாவது எட்டு கிராமின் விலை ₹.69,296.
22 காரட் தங்கத்தின் விலை ₹.7940. இந்த விலையிலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு பவுனின் விலையானது ₹.63,520. இன்றைய நிலவரப்படி, வெள்ளி ஒரு கிராமின் விலை ₹.105. இதன் விலையிலும் கடந்த மூன்று நாட்களாக எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து இறங்குமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை எப்பொழுது எவ்வளவு உயரம் என்ற அச்சத்தில் தான் இன்றளவும் உள்ளார்கள்.
தங்கம் விலை அதிகரிப்பு குறித்து கருத்து கணிப்பு எடுத்த போது, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடுநிலைமையற்ற வாக்குவாதங்களே தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் கண்ட வருவதாக தகவல் கூறப்பட்டிருந்தது. தற்சமயம் சரிவை காணும் தங்கத்தின் விலையால் மக்கள் ஒரு சிலர் பெருமூச்சு விட்டு அச்சத்தில் இருந்து விடுபட்டு வருகின்றனர். ஏனெனில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்ததே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.