மார்ச் ஆறு இன்றி எபிசோடின் ஆரம்பத்தில் வித்யா இறைவனை வணங்க, முருகன் அவர் பின்னால் சென்று அடுத்தது என்னங்க என்று கேட்கிறார். அதற்கு வித்தியா அப்புறம் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். ஈசியா ஒருபுறம் வெளியேற மறுபுறம் சீதா உள்ளே வந்து அருணுடன் கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு செல்கின்றனர். இன்னும் எவ்வளவு நாள் வெயிட் பண்ண என்று அருண் கேட்க, சீதா உங்களை பத்தி எனக்கு எதுவும் தெரியாது.
கொஞ்ச நாள் ஃப்ரண்டா பழகுவோம் என்கிறார். கொஞ்ச நாள் கூட வெயிட் பண்ண முடியாதா? என சீதா கேட்க, வெயிட் செய்கிறேன் என்று அருண் பொறுமையோடு கூறுகிறார். அடுத்ததாக பரசு அவர்கள் திருமணத்திற்காக பட்ஜெட் போட்டுக் கொண்டு இருக்கும் போது, பட்ஜெட் குறித்து பேச முத்து, மீனா அங்கு ஆஜாராகுகிறார்கள்.
பரசு முதலில் மீனாவிடம் பூ டெக்கரேஷனுக்கு எவ்வளவு ஆகும்? என்று கேட்க, அதெல்லாம் பார்த்துக்கலாம் அங்கிள் என்று சொல்ல, அங்கிள் அதனை மறுத்து, பூவெல்லாம் வாங்கணும், வேலை செய்றவங்களுக்கு எல்லாம் காசு கொடுக்கணும் எவ்வளவு சொல்லுமா என்று கேட்க, அங்க என்னோட பிரெண்ட்ஸ் தான் நான் பாத்துக்குறேன்னு மீண்டும் மறுக்கிறாள். தொடர்ந்து வற்புறுத்திய பிறகு 20000 ரூபாய் போதும் அங்கிள் என்று கூறுகிறார்.
அவர் அதனை ரூ. முப்பதாயிரம் என்று நோட் செய்து கொள்கிறார். அதன் பின் முத்துவிடம் காருக்கு எவ்வளவு? என்று கேட்க, டீசலுக்கு ஒரு 4000 போதும் சார் என்று சொல்ல, அவரது 8000 என்று நோட் செய்து கொள்கிறார். அதன் பிறகு மேக்கப் போடுவதற்கு எவ்வளவு ஆகும் கேட்டு சொல்லுமா என்று கேட்கும் போது, மீனா ரோகினிக்கு கால் செய்து கேட்கிறாள்.
அதற்கு அவர் 15,000, 20,000 ஆகும் என்று கூற ஏங்க கொஞ்சம் குறைச்சுக்கோங்க என்று மீனா கெஞ்ச, சரிங்க 12000 சொல்லுங்க. என் பீஸ் கூட வேணாம் என்று சொல்லி ஃபோனை கட் செய்கிறாள். இவர்கள் பேசிக் கொண்டே இருக்கும் போதே ரோகிணியின் மாமா பரசுவிற்கு ஃபோன் செய்ய அவர் ஸ்பீக்கரில் போனை போடுகிறார். ஏப்பா வீட்டுக்கு தேவையான கட்டில், பீரோ எல்லாம் நான் வாங்கி கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல முத்துக்கும், மீனாவிற்கும் இந்த குரல் எங்கேயோ கேட்டது போல் உள்ளது என்று சந்தேகம் இடுகிறார்கள். எப்படியும் கல்யாணத்துல சந்திக்க தானே போறோம் என்று அடுத்த வேலையை பார்க்க செல்கிறார்கள்.
மற்றொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா விஜயாவிற்கு போன் செய்து பேசிக்கிட்டீங்களா என கேட்க, இப்பதான் வந்திருக்காங்க நான் பேசுறேன் என்று போனை வைக்கிறாள் விஜயா. முதலில் அண்ணாமலையிடம், நடந்தவற்றை எடுத்துக் கூற அவர் இதில் தலையிட மாட்டேன் என்று கூறி செல்கிறார். அடுத்து ரவியிடம் எடுத்துச் சொல்ல ஆரம்பிக்கும்போது முத்து மீனா மனோஜ் ரோகிணி ஆகியோர் அங்கு வந்து விடுகின்றனர்.
நான் ஸ்ருதி அம்மாகிட்ட ஹோட்டலிலே பேசிட்டேனே என கூற முத்து தலையிட்டு பிளாக் செக்க எடுத்துட்டு வந்தாங்க என்று சொல்ல, அது பிளாங்க் செக் என்று மனோஜ் கிண்டல் அடிக்கிறார். பண செக்கு தானே என்று முத்து கூறும்போது ரோகிணி தலையிட்டு ஸ்ருதியின் அம்மாவை முத்து ரொம்ப தூரம் பேசி செக்க கிழிச்சு போட்டாரு என்று ஏத்தி விடுகிறாள்.
அதற்கு ரவியும் நானும் அப்படித்தான் செய்திருப்பேன் என்று கூற விஜயா முத்து பேசலாம் கேட்காத அவன் நீ ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சு, பெரியாளா வந்துடுவேன் பொறாமை என்று கூறுகிறார். நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிற முதல் ஆளு அவன் தான் என்று கூறிவிட்டு செல்கிறார் ரவி. ரவி மேல தனிமையில் குழம்பிக் கொண்டிருக்கும் போது, மனோஜ் முத்துவும் மேலே செல்கிறார்கள். மனோஜ், ரவியின் மாமியாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்.
அதற்கு முத்து மறுத்து இவன் இப்படித்தான் பேசுவான். நான் உனக்கு என்ன வேணாலும் ஹெல்ப் பண்ற சொந்த காலில் நின்னு முன்னேறு என்று ரவிக்கு சப்போர்ட் செய்கிறார். அதற்கு மனோஜ், இவன் பெரிய மல்டி மில்லியனர் என்று கேலி பேச, நான் மல்டி மில்லியனர் எல்லாம் இல்ல. ஆனால் என்னால முடிஞ்ச அளவு உதவி செய்வேன் என்று இன்றைய எபிசோடை முடிக்கிறார்கள்.