தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வந்திருந்தது. சமீபத்தில் சில ரூபாய்கள் குறைக்கப்பட்டு விற்கப்பட்டு இருந்தது. அதற்கு இரண்டு மடங்காக நேற்று விலை ஏறி இருந்தது. அதனை தொடர்ந்து இன்று சற்று தங்கத்தின் விலை இறக்கத்தை கண்டுள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி, 24 காரட் தங்கத்தின் விலை ₹.8,749. இது நேற்றைய விலையை விட ரூபாய் 49 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹.69,992 ஆக விற்கப்படுகின்றது. இது நேற்றைய விலையை விட 392 ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது.
சென்னை நிலவரப்படி 22 காரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை ₹.8,020. இது நேற்றைய விலை விட ரூபாய் 45 குறைவாக விற்கப்படுகிறது. இதுவே ஒரு சவரனின் விலை ₹.64,160. இது நேற்றைய விலையை விட ரூபாய் 360 கம்மியாக விற்கப்படுகின்றது. வெள்ளி விலை சற்று சராசரியாக உயரிக் கொண்டே வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹.108. ஒரு கிலோவின் விலை ஆனது ₹. 1,08,000. நேற்றைய விலை ஆனது ₹. 107000. இது ஆயிரம் ரூபாய் கம்மியாக விற்கப்படுகின்றது. தொடர்ந்து விலை சரமாரியாக உயர்ந்து கொண்டே இருப்பது மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை உயர்வு எதனால் என்ற குழப்பமும் பெரும்பாலும் பேசப்பட்டு வருகின்றது.