நேற்றைய எபிசோடில் எண்டில் தொடங்குகிறது இன்றைய எபிசோட். மூவரும் மாடியில் தொடர்ந்து டிஸ்கஸ் செய்து வருகின்றனர். அப்போ மனோஜ் முத்து சொல்றத கேட்காத நீ உன் மாமியார் உன் முன்னேற்றத்துக்கு தான் காசு கொடுக்குறாங்க என்று கூறி அதை வாங்கி ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ணு, நீயும் எவ்வளவு நாள் தான் சமையல்காரனா இருப்பாய் என்று கிண்டல் பேசுகிறார். அதற்கு ரவி நான் செஃப்தான். அதுக்குன்னு என் பொண்டாட்டி வீட்டில இருந்து வர்ற காசுல நான் முன்னேறனும்னு எனக்கு தேவையில்லை. உடனே முத்து சூப்பர் டா என்று பாராட்டி விட்டு, அவங்க நல்லது சொன்னா கூட யோசிக்கலாம் டா ஆனா உன்னையையும், பல குரலையும் வளைச்சு போட திட்டம் போட்டு இருக்காங்க என்றபடி அட்வைஸ் கூறுகிறார்.
உடனே மனோஜ் மாமியார் வீட்டில் இருந்து அவனுக்கு எதுவும் வரல இல்ல அந்த பொறாமையில பேசுறான் என்று கூற ரவி அவன் ஒன்னும் உன்ன மாதிரி இல்ல! என கூறவும் மனோஜ் கோவம் வந்து அப்போ நான் என் மாமியார் வீட்டு காசுக்கு எதிர்பார்த்து இருக்கேனா என்று கேட்க, சற்றும் தாமதிக்காத ரவி ஆமா! அதுல என்ன சந்தேகம்! என்று கூறுகிறார். உடனே மனோஜ் உனக்கு போய் அட்வைஸ் பண்ண வந்தேன் பாரு! எனத் திட்டி கொண்ட கிளம்புகிறார்.
ஒருபுறம் மீனா, ரோகிணி, ஸ்ருதி மூவரும் அடுப்படியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். மனோஜைப் போலவே ரோகிணியும், ரவி ஏன் அப்படி பண்றாரு! உங்க அம்மா உங்க நல்லதுக்கு தான குடுக்குறாங்க காசு! நீங்க ரவி மேல கோபப்பட்டதுல தப்பே இல்ல என்று ஏத்தி விடுகிறாள். அதற்கு மீனா, ஏங்க நீங்க இப்படி பேசுறீங்க என்று தலையிட்டு, நீங்க மாமாவோட காசை ஜீவா கொடுத்ததா சொல்லி, ஷோரூம் ஓபன் பண்ணுனீங்களே என சொல்ல ரோகினிக்கு கோபம் வந்து விடுகிறது. ஸ்ருதி தலையிட்டு என்னால உங்களுக்குள்ள எந்த சண்டையும் வேண்டாம் என்று அவர்களை தடுக்கிறாள்.
மீனா, ரவிக்கு சொந்தமாக உழைத்து, இன்னும் நிறைய விஷயங்களை கற்று ரெஸ்டாரண்ட் வைக்கணும்னு நினைக்கிறாரு. அவருக்குனு ஒரு சுயமரியாதை இருக்கும்ல என்று சொல்ல, ஸ்ருதி கோபப்பட்டு அப்போ அவங்க அம்மா, அப்பா ஏதாவது கொடுத்தா அதை நான் வாங்கிகிட்டா என்னோட சுயமரியாதை போயிடுமா என்று கோபமாக கேட்டுவிட்டு செல்கிறாள். மறுநாள் ஆர்டர் எடுக்க மீனா மேனேஜரை சந்திக்க, அவர் உங்களது வேலை நல்லா இருக்கு. இந்த மண்டபத்துக்கான வேலை கானட்ரக்டே உங்களுக்கே குடுத்துரலாம்னு நினைக்கிறேன் என்று கூறிவிட்டு எனக்கான கமிஷனும் வரவேண்டும் என்று கூறுகிறார்.
முதலில் யோசித்த மீனா, சிறிது நேரத்தில் மனம் மாறி அவர் கொடுக்கின்ற காண்ட்ராக்ட் பேப்பரில் படித்துப் பார்க்காமல் கையெழுத்து போடுகிறார். இதை வந்து குடும்பத்தினரிடம் கூறி சந்தோஷம் அடைகிறார்கள். முத்து மீனாவை மகிழ்ச்சியில் தூக்கி சுற்றுகிறார். விஜயா மட்டும் வழக்கம்போல் வயிற்று எரிச்சல் பட்டு கோபப்படுகிறார். இத்தோடு இன்றைய எபிசோட் முடிகிறது.