மீனா ஆர்டரை பற்றி கூற, அண்ணாமலை உன் மனசுக்கு நீ நல்லா வருவமா! என்று ஆசி வழங்குகிறார். விஜயா பொசிந்துக் கொண்டு, இப்பதான் ஆர்டர் வந்து இருக்கு அதுக்குள்ள ஆர்ப்பாட்டமா! என்றபடி பேசுகிறார். முத்து போன தடவை மாதிரி இந்த தடவை யாராவது கெடுத்துக்கிட்டு இருக்க முடியாது. இந்த தடவை யாரு இழுத்துகிட்டு கிடந்தாலும் நாங்க இந்த ஆர்டர செஞ்சு முடிப்போம் என்று பதிலடி கொடுக்கிறார். உடனே, விஜயா அண்ணாமலையை நாடிய போது, அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார்.
ஒருபுறம் ரோகிணி ஸ்ருதியிடம், மீனா வளர்ந்துகிட்டே போறாங்கங்க! உங்களை விட நல்லா சம்பாதிப்பாங்க போலாங்க என்று ஏத்தி விடுகிறாள். அதற்கு ஸ்ருதி சிரித்துக்கொண்டே, சம்பாதிக்கட்டும் அதுவும் நல்லது தானே! என்று கூறுகிறாள். உடனே முத்து கொளுத்தி போட்டது, வீணா போச்சு! என்று சொல்ல ரோகிணி கோவித்துக் கொண்டு செல்கிறாள். ரவி எங்களுக்கெல்லாம் ஸ்வீட் இல்லையா என்று கேட்க, மீனா நீங்க வேலைக்கு போயிட்டு வாங்க நான் செஞ்சு வைக்கிறேன் என்று சொல்கிறாள்.
அனைவரும் சென்ற பின், கிச்சனில் முத்துவும், மீனாவும் கட்டிக் கொண்டு ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர். எப்படியும் ஒன்றரை லட்சம் ஆகுங்க! என்று கூற முத்து என்னிடம் கொஞ்சம் காசு இருக்கு ஏதாவது அரேஞ்ச் பண்ணலாம் என்று கூறுகிறார்.
வேண்டாங்க! நான் முடிஞ்ச அளவு ட்ரை பண்றேன் முடியலைனா கேட்கிறேன் என்று மீனா சொல்கிறாள். முத்துவும் சரி என்று சொல்லிவிடுகிறார். ஒருபுறம் விஜயா ரூமில் உட்கார்ந்து கொண்டு மீனாவை எண்ணி வஞ்சித்துக் கொண்டு இருக்க, சிந்தாமணியிடம் இருந்து போன் வருகிறது. உடனே பொறாமையா தாளாது, சிந்தாமணியிடம் ஆர்டர் பற்றி கூறுகிறாள்.
அதற்கு சிந்தாமணியும் செய்யட்டும் விடுங்க! என்று பெரிய மனதோடு கூறுவதை கண்ட விஜயா அதிர்ச்சி அடைகிறாள். என்னங்க! உங்க தொழிலுக்கு போட்டியா வளருரான்னு தானே சொல்றேன்! எனக் கூற, சிந்தாமணி இனிமே அவ ஃப்ளவர் பத்தி யோசிக்கவே முடியாது. வீட்டில் காலிஃப்ளவர் தான் செய்யணும் என்று கூறி போனை கட் செய்கிறாள். விஜயாவும், காலிஃப்ளவரை வாங்கி வந்து இதை சமைத்து வைக்குமாறு மீனாவிடம் கண்டிஷன் இட்டு, சிந்தாமணி கூறுவதையும் எண்ணிக் கொள்கிறாள். முத்துவும், அண்ணாமலையும் பேசிக் கொண்டிருக்க ஒருபுறம் பரசு வருகிறார்.
கல்யாண வேலை எப்படி போயிட்டு இருக்கு என்று விசாரித்துக் கொண்டு இருக்கும்போதே, கொண்டு வந்த பாத்திரத்தை மீனாவிடம் பரசு கொடுக்கிறார். இதில் என்ன இருக்கு என்று கேட்க, மாப்பிள்ளை வரும் போது நாலு கிலோ கறி வாங்கிட்டு வந்துட்டாரு. அதான் ரெண்டு கிலோ உங்களுக்கு எடுத்துட்டு வந்துட்டேன் என்று கூறுகிறார்.
விஜயா இதையும் பாதி குழம்பு வச்சிடு. பாதி கறிய வறுத்திடு என்று ஆர்டர் இடுகிறாள். கல்யாண விஷயம் பற்றி கேட்க, இன்னும் கொஞ்சம் காசு பிரட்டனும் என்று கூறுகிறார். ஏப்பா! நீ மனோஜ் படிப்புக்காக நான் உன்கிட்ட பணம கேட்ட போது எவ்வளவு அரேஞ்ச் பண்ணி கொடுத்த, இப்போ என்னிடம் காசு கேட்கணும்னு உனக்கு தோணலையா! என்று சொல்லிவிட்டு நான் அரேஞ்ச் செய்கிறேன் என்று கூறி விடுகிறார். விஜயா 2 கிலோ கறியை கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு, ஒரு லட்சம் பணத்த கேக்குறாரு என்று மனதில் திட்டுகிறாள். இன்னொரு புறம் முத்து கார் செட்டுக்கு வருகிறார்.
முத்துவிடம் நண்பர் ஒருவர், லண்டன் பார்ட்டி ஒன்று கோயில்களுக்கு செல்ல வேண்டுமா! நீ போய் ஊரை சுத்தி காமி! நீ கூட சமாளிச்சுடுவ! என்று கூறுகிறார். முத்து அவர்களிடம் தெரிந்த இங்கிலீஷில் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த மீனா, முத்துவிடம் நீங்க படிச்சிருக்கலாம்க! என்று கூறுகிறார். படிச்சிருந்தா! நீ எனக்கு கிடைத்திருக்க மாட்ட! என்று இன்றைய எபிசோடு முடிகிறது.