மத்திய அரசு வழங்கும் திருமண உதவித்தொகை!! ரூ.2.50 லட்சம் பெறுவதற்கான வழிமுறை!!

திருமணத்தின் பொழுது ஏற்படும் செலவுகள் மற்றும் தம்பதியினர் தங்களுடைய குடும்ப வாழ்வை நிம்மதியாக துவங்கும் வகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு திருமண நலத்திட்டங்களை செய்து வருகிறது. அவற்றில் முக்கியமான ஒரு திருமண நலத்திட்டம் தான் டாக்டர் அம்பேத்கர் கலப்பு திருமண திட்டம்.

 

இந்த திட்டத்தின் கீழ் மணமக்களுக்கு 2.50 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற நினைப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் மணமக்களில் யாராவது ஒருவர் கட்டாயமாக எஸ்சி எஸ்டி பிரிவை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒருவர் எஸ் சி எஸ் டி ஆக இருக்கும் பட்சத்தில் திருமணத்தில் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருத்தல் கட்டாயம். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் திருமண உதவித் தொகையை இத்திட்டத்தின் கீழ் பெற தகுதியுடையவர்கள்.

 

இத்திட்டத்தில் முதலில் 1.50 லட்சம் ரூபாய் மணமக்களுக்கு திருமண பொருட்கள் மற்றும் இணைந்து வாழ்வதற்கு தேவையான பொருட்கள் வாங்க பணமாக வழங்கப்படும் மீதமுள்ள 1 லட்சம் ரூபாய் அம்பேத்கர் திட்டத்தின் கீழ் 3 வருடங்களுக்கு சேமிப்பாக வங்கியில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் இருக்கக்கூடிய சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மணமக்களுக்கு உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram