காபூல்: ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்து விழுந்தது 250 பேர் உயிரிழந்தனர். நகங்கர் மாகாணம், ஜலாலாபாத் பகுதியில் மையம் கொண்டு அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. அடுத்து உருவன நிலநடுக்கம் 4.5 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவை இடிந்து விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தானின் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தொடர்ந்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் சரிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 250 பேர் உயிரிழந்தனர். மேலும் பல படுகாயம் அடைந்துள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய பலரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பலர் தங்களது குடும்பங்களையும் வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் பலர் தங்களது வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர். கட்டிடங்கள் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் என இருநூற்று ஐம்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானையே உலுக்கி வருகிறது.