Politics : தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக இடையிலான கூட்டணி உருவாவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படாத நிலையில் மீண்டும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையிலான ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் சென்று முடிந்ததாக கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் வைக்கும் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை என்று அதிமுக இந்த கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பத்திலேயே முறித்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி அதிமுக வட்டாரங்கள் தெரிவிப்பது என்னவென்றால் தமிழக வெற்றி கழகம் கோரிக்கைகள் அனைத்தும் வேலைக்கு ஆகாதவை, மேலும் தமிழக வெற்றிப் கழகம் அதிகபட்சமாக 117 இடங்கள் வேண்டுமென்றும் அது மட்டுமல்லாமல் பாதி ஆண்டு நீங்கள் ஆட்சியிலும் பாதி ஆண்டு நாங்கள் ஆட்சியிலும் இருக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து எங்களுக்கு தான் பெரிய பலம் உள்ளது ஆனால் நீங்கள் 117 இடங்களில் தேவை என்று பேசி இருப்பது, உண்மையில் அவ்வளவு வாக்கு சதவீதம் விஜய்க்கு இருக்கிறதா? ரசிகர்கள் பலர் இருந்தாலும் வாக்கு சதவீதம் இருக்கிறதா என்று இந்த பேச்சுவார்த்தை ஆரம்பக்கட்டத்திலேயே முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக பாஜக மாறி மாறி கூட்டணிக்காக பேச்சுவார்த்தை தூது தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நமது எதிரி திமுக தான் அதனால் எந்த கட்சியும் நமக்கு எதிரி இல்லை என எடப்பாடி பழனிசாமி தற்போது பாஜகவுடன் கூட்டணி வைக்கும் சூழலில் இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையும் அதிமுக எதிரி இல்லை திமுக தான் எதிரி எனக் கூறும் வரும் நிலையில் தற்போது இரு கட்சிகளும் கூட்டணி வைத்துவிட்டு தவெக வை அம்போன்னு விடும் என்று கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.