மொரிஷியஸ் பிரதமர் இந்தியா வருகை!! 9 ம் தேதி தொடங்கி 8 நாட்கள் சுற்றுப்பயணம்!! 

Mauritius Prime Minister to visit India

புதுடெல்லி: மொரிசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இந்தியாவிற்கு வரும் ஒன்பதாம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். குறிப்பாக ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் ஆக இந்தியா வருகை தர இருக்கிறார். பிரதமரின் இந்திய பயணத்தில் அயோத்தியா வாரணாசி திருப்பதி மற்றும் மும்பை போன்ற நகரங்களுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அரசு முறை பயணத்தின் போது ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்துப் பேச இருக்கிறார். மூலோபாய நட்புறவை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகை குறித்து மும்பையில் வர்த்தக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் மொரிசியஸ் பகிரப்பட்ட வரலாறு மக்களின் பிணைப்புகள் கலாச்சாரம் போன்றவைகளில் வேரூன்றி நெருங்கிய நட்புறவுடன் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கின்றது. இதற்கு முன்னர் மொரிஷியஸ் பிரதமர் ராம்கூலம் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பதவியேற்ற அதற்கு பிறகு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணமாக இந்த பயணம் அமைகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் பிரதமர் மோடி மொரிஷியஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வலிமை மற்றும் உறுதிப்பினைப்புகளை நவீனப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram