கிரிக்கெட்: நேற்று நடைபெற்ற குஜராத் மற்றும் பஞ்சாப் இடையிலான போட்டியில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார் மேக்ஸ்வெல்.
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்போது தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தொடரின் ஐந்தாவது போட்டியான குஜராத் மற்றும் பஞ்சாப் திரு அணிகளுக்கு இடையே போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்றது. முதலில் பவுலிங் செய்ய தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 243 ரன்கள் எடுத்து பெரிய இலக்கை நிர்ணயித்தது.
இதற்கு முன் பெங்களூரில் பேட்டிங் செய்த மேக்ஸ்வெல் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி மீண்டும் வாங்கியது. பஞ்சாப் அணி முக்கிய விக்கெட்டுகள் இழந்த நிலையில் மேக்ஸ்வெல் களமிறங்கினார். ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதுவரை இவர் 19 முறை டக் அவுட் ஆகி டக் அவுட் ஆன மோசமான பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் 18 முறை டக் அவுட் ஆகியுள்ளனர்.
இருப்பினும் குஜராத் அணி இலக்கு எட்ட முடியாமல் தோல்வி தழுவியது. பஞ்சாப் அணி இம்பேக்ட் பிளேயராக வைசாக் விஜயகுமாரை களம் இறக்கியது. அபார பந்துவீச்சின் மூலம் ரண்களை கட்டுப்படுத்தி 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.