Mayiladudhurai: கடந்த மாதம் 14ஆம் தேதி கள்ளச்சாராய வியாபாரம் விற்பனை குறித்து தெரிவித்த இரண்டு வாலிபர்களை கொலை செய்த கள்ளச்சாராயண கும்பல். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேலும் அவர்களை தட்டி கேட்டதில் எதிரொலியாக அந்த சாரய வியாபாரிகள் அந்த இரண்டு இளைஞர்களை கொலை செய்தனர்.
14ஆம் தேதி இரவு ராஜ்குமார் மற்றும் தங்கதுரை மூவேந்தன் மூவரும் சேர்ந்து தினேஷ் என்ற வாலிபரை தாக்கினர். அதனை முட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் ஹரி சக்தி ஆகிய இரண்டு பேரையும் அந்த கள்ளச்சாராயம் கும்பல் குத்தி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவத்தை பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ராஜ்குமார் தங்கதுரை மூவேந்தன் முனுசாமி மற்றும் மஞ்சுளா என்ற பெண் உட்பட ஐந்து பேரையும் கைது செய்தனர்.
மேலும் கிராமத்தில் சாராய வியாபாரம் நடப்பது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்தும் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இந்த கொலை சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்த சம்பவம் குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைத்து காவலர்களையும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்தக் காவல் நிலையத்தின் தலைமை காவலர் நாகவல்லி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் தனிப்பிரிவு போலீஸ் எஸ் பி பிரபாகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கர் மணிமாறன் மற்றும் 19 போலீஸ் அதிகாரிகளை இரவோடு இரவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் எஸ் பி ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக 70 போலிஸ் அதிகாரிகளை பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்