விழுப்புரம்: ராமதாஸ் ஆகிய எனக்கும் செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனை எதுவும் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கும் மக்களுக்கும் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் இரண்டு பெரிய பிரமுகர்கள் மூலமாக நடந்து பேச்சு வார்த்தையும் தோல்வியுற்றுவதாக ராமதாஸ் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் அன்புமணி பாமக தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்பது தெரியவந்தது.
அதேபோல் இந்த விவகாரத்தில் என்னிடம் சமரசம் பேச 14 பஞ்சாயத்துதாரர்கள் ஒரே மாதிரியான முடிவை கூறியுள்ளனர். இதனால் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அனைவருமே ஒரு பக்கமாக பேசி பேசுவது போல் தெரிகிறது. இதனால் நீயா? நானா! என்று வா பார்த்து கொள்வோம் என்று முடிவு செய்து விட்டேன்.
மேலும் பேச்சுவார்த்தைக்கு வந்த ஆடிட்டர் குருமூர்த்தியும் அன்புமணியே தலைமை பண்பு கொண்டவர் என்றும் அவர்தான் அந்த பதவிக்கு சரியானவர் என்றும் கூறியுள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் வரும் காரணத்தினால் நீங்கள் சற்று மௌனம் காக்க வேண்டும் என்றும் பிறகு உங்கள் அப்பா மகன் பிரச்சனையை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
பாமக நிறுவனர் மற்றும் தலைவர் பிரச்சினையை தாண்டி குடும்ப பிரச்சினையாக மாறி உள்ளது. அப்பா மகன் இருவரும் சண்டை போட்டுக் கொள்வது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக உள்ளது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அனைவரும் இப்பொழுதே கூட்டணி அமைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர் மற்ற கட்சிகள்.
ஆனால்,பாமக தங்கள் கட்சிக்குள்ளேயே அடித்துக் கொண்டு உள்ளது. மேலும் பாமக கூட்டணி குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சுவார்த்தையின் தோல்வியில் முடிந்ததால் அடுத்த கட்ட நகர்வாக அன்புமணி என்ன செய்வார் என்று தெரியவில்லை. மேலும் இந்த பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும் என்று பாமக தொண்டர்கள் விரும்புகின்றனர்