Chennai; இன்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தினால் இன்றும் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடலோரப் பகுதியில் ஒரு சில பகுதிகளில் நேற்று சாரல் மழை தொடங்கியது. மேலும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
நேற்றைய நாளில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் 7 சென்டிமீட்டர் நாகப்பட்டினத்தில் மற்றும் திருவாரூரில் 6 சென்டிமீட்டர் விருத்தாச்சலம் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மணல்மேடு ஆகிய பகுதிகளில் 3 சென்டிமீட்டர் மற்றும் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் 2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான லேசான காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மற்றும் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
இதனால் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஒரு சில உள் மாவட்டங்களில் நாளை அடிக்கும் வெயில் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக பதிவாகலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேடை மூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு இயக்குனர் செந்தாமரை கூறியுள்ளார்..