தமிழ்நாட்டில் தற்சமயம் வரை பால் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு பல்வேறு மானியங்கள் மற்றும் இழப்பீடுகள் வழங்கி வருகின்றது. பால் உற்பத்தியாளர்கள் அவர்களின் இழப்பீடு தொகையை அதிகரிக்கக் கோரியும், நிதி தொகையை அதிகரிக்கக் கோரியும் தமிழக அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையானது தற்சமயம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் பால் உற்பத்தியாளர்கள் மிகுந்த சந்தோசத்தில் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். பால் உற்பத்தியாளர்களின் இன்னும் சில கோரிக்கைகள் நிலுவையில் உள்ளதையும் எடுத்துரைத்துள்ளனர். இதுவரை பால் உற்பத்தியாளர்களுக்கு விபத்து இழப்பீடானது இரண்டரை லட்சம் வழங்கப்பட்டு வந்திருந்தது. உற்பத்தியாளர்களின் இரண்டு குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூபாய் 25000 வழங்கப்பட்டு இருந்தது. மேலும் ஒரு பெண் குழந்தைக்கு மட்டும் திருமண உதவித்தொகை ரூபாய் 30,000 ஆக கொடுக்கப்பட்டு வந்திருந்தது.
இதில் தற்சமயம் தமிழக அரசு இழப்பீடு மற்றும் நிதியில் உயர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி விபத்து ஏற்பட்டு மரணத்திற்கான இழப்பீடு ரூபாய் 4 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு கல்வி தொகை ரூபாய் 50,000 ஆகவும், ஒரு பெண் குழந்தை திருமணத்திற்கு ரூபாய் 80 ஆயிரம் உதவி தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த தொகைக்கு இரு மடங்கு அல்லது அதற்கு மேல் இந்த முறை உயர்த்தப்பட்டுள்ளது. இது பல நாட்கள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையாகும். இது தற்சமயம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.