தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது!! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு!!

தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது!" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு! அமைச்சர் ரகுபதி அதிரடி!

இல்லாத வழக்கத்தை நுழைகிறார்கள் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு அமைச்சர் ரகுபதி காட்டம்

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி அளித்துச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அதிரடியாக அறிவித்துள்ளார்.

சட்டத்திற்குப் புறம்பானது: உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு சட்டத்திற்குப் புறம்பானது. அங்கு தீபம் ஏற்றியதற்கான வரலாற்று ரீதியான ஆதாரங்கள் எதுவும் அரசிடம் இல்லை” என்று கடுமையாகச் சாடினார்.

உள்நோக்கம் கொண்டது: தொடர்ந்து பேசிய அவர், “இல்லாத ஒரு வழக்கத்தைப் புதிதாக நுழைப்பது உள்நோக்கம் கொண்டது. ஆதாரங்கள் இல்லாத ஒரு வழக்கத்தை நீதிமன்றம் அனுமதிப்பது முறையல்ல. எனவே, இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். சட்ட ரீதியாக இதை எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.

மீண்டும் பதற்றம்: காலையில் தீர்ப்பு வந்தவுடன் இனிப்பு வழங்கி கொண்டாடிய பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினருக்கு அமைச்சரின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பிடிவாதமாக இந்தத் தடையைத் தொடர நினைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் இப்போது மதுரையைத் தாண்டி டெல்லி உச்சநீதிமன்றத்திற்கு நகர்வதால், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு கிடைக்க இன்னும் சில காலம் எடுக்கும் எனத் தெரிகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram