Annamalai: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறவியிலேயே பொய் பேசும் நபர் என்றும் அவர் சுமார் 2 நிமிடங்களுக்கு 10 பொய்கள் எளிதில் பேசுவார் என்றும் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார். மேலும் திமுகவில் உள்ள அனைத்து நபர்களும் கூட்டணி கட்சி தலைவர்களும் தவறான செய்திகளையும் பொய்களையுமே பரப்புவதில் வல்லமை வாய்ந்தவர்களாக வளர்ந்து வருகின்றனர்.
மேலும் இவர்களின் பொய்களை மக்கள் யாரும் நம்புவதில்லை என்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக பொய்களை மட்டுமே பரப்பி வரும் திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவரது பதிவில் கூறியுள்ளார். மேலும் முதல்வர் பேசும் படியாக ஒரு வீடியோவை அண்ணாமலை வெளியிட்டார். அதில் முதல் ஸ்டாலின் மாத்தி மாத்தி பேசுவதாக வீடியோ ஒன்று அமைந்துள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் அரசு பள்ளியில் பயிலும் வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்த முடியாமல் அவர்களுக்கு தரம் இல்லாத கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்மொழிக் கொள்கைக்கு எதிராக நடந்து கொள்கின்றார்கள்
. மேலும் இந்தி திணிப்பு என்ற போலி நாடகத்தினை அரங்கேற்றி வருகிறார்கள். 2026 தேர்தலில் பாஜக அதிக பெரும்பான்மையை பெற்றுவிடும் என்ற காரணத்தினால் பொய்யான இந்தி திணிப்பு நாடகத்தை திமுக அரசு நடத்தி வருகிறது. மேலும் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கோயம்புத்தூரில் போராட்டத்தை நடத்திய தலைவர் சந்திரசேகர் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் வசந்த் மற்றும் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
திமுக நடத்தும் பொய்யான போராட்டங்களுக்கு மட்டுமே காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்கின்றனர் பாஜகவின் போராட்டங்களுக்கு பாதுகாப்பும் கொடுப்பதும் இல்லை அவர்களுடைய போராட்டத்திற்கு அனுமதியும் கொடுப்பதில்லை இது ஜனநாயக விதிமீறல் ஆகும். மற்றும் காவல் துறை திமுக அரசிற்கு ஏவல் துறையாக உள்ளது.
நம்ம கல்வி கையெழுத்து இயக்கம் தொடங்கி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தெரிந்துகொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் பயந்து போய் இருக்கிறார் என்பதுதான் உண்மை. கையெழுத்து இயக்கத்திற்கு நீங்கள் எவ்விதமான அடக்கு முறையை கையாண்டாலும் தமிழகத்தில் முனம்மொழிக் கொள்கை நிச்சயம் வரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது அறிக்கையில் கூறியுள்ளா
ர்.