ஆதாரில் மொபைல் எண்ணை மாற்ற அப்பாயிண்ட்மெண்ட்!! புதிய செயல்முறை அமல்!!

ஆதார் என்பது இந்திய நாட்டின் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. இப்பொழுது எல்லா வேலைகளும் டிஜிட்டலிஸ்ட் ஆக மாறுவதற்கு ஆதார் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. அனைத்து நிதி தொடர்பான மாற்றங்களும், தனிநபர் ஆவணங்கள் ஆகியவற்றுக்கு இது அடிப்படை ஆதாரமாக செயல்படுகின்றது. இது குறித்த விழிப்புணர்வு பதிவுதான் இது. இதில் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணை மாற்றுவதற்கு என்ன முறைப்படி செய்வது என்று இப்பதிவில் காணலாம். ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு Otp போன்ற தரவுகள் வரும் என்பதால் அதனை நாம் மாற்றுவதில் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சிலர் மொபைல் எண்ணை மிஸ் செய்து இருக்கலாம். அடிக்கடி மொபைல் நம்பரை மாற்றும் பழக்கம் இருக்கலாம்.

இதன் காரணமாக ஆதாரில் மொபைல் எண் மாற்றுவதற்கு நாம் அருகில் உள்ள ஆதார் கேந்திராவை நாட வேண்டும். முன்கூட்டியே நம் மொபைல் மூலம் அப்பாயின்மென்ட் வாங்கிக் கொள்ளலாம். UIDAI யின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டின் ஹோம் பேஜில் உள்ள விருப்பமொழியை தேர்வு செய்து உள் நுழையவும். ஹோம் பேஜிலேயே மை ஆதார் என்ற விருப்பத்தின் கீழ் கெட் ஆதாரில் நமக்கு ஏற்ற நாள், நேரத்தை குறிப்பிட்டு அப்பாயின்மென்ட் புக் செய்து கொள்ளலாம். உங்களது பழைய மொபைல் எண்ணை உள்ளிட்டு, கேப்ஷா போர்ட்டலை நிரப்ப வேண்டும். ஜூஸ் தி அப்டேட்டில் மொபைல் எண் சேஞ்ச் என்பதை கிளிக் செய்து கொள்ளவும். அதில் கேட்கப்படும் பிற விவரங்களை தேர்வு செய்து கொள்ளவும். நாள், நேரம் ஆகியவற்றை பதிவிட்ட பின் சப்மிட் செய்து கொள்ளவும். பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் ஆவணங்களை எடுத்துக் கொண்டு ஆதார் கேந்திராவுக்குச் சென்று பயோமெட்ரிக் மூலம் புதிய எண்ணை பதிவு செய்த மூன்று மாதத்திற்குள் உங்கள் மொபைல் எண் மாற்றப்படும். இதன் உறுதி நிலைக்காக அங்கு வழங்கப்படும் ஸ்லிப்பை மொபைல் எண் மாறும் வரை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram