தஞ்சாவூர்: ராஜேந்திர சோழனுக்கு அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்ட பேரரசர் என்ற பெருமை உண்டு. அந்த வகையில் ராஜேந்திர சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார். திருச்சியில் நடைபெற்ற வாகன பேரணியில் கலந்து கொண்டார்.
அப்போது பொதுமக்கள் மற்றும் பற்றி தொண்டர்கள் அனைவரும் ஒன்று திரண்டு பூ தூவி உற்சாக வரவேற்பளித்தனர். தமிழக பாரம்பரிய உடை அணிந்து தஞ்சாவூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் இறைவணக்கம் செலுத்தி ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றார். ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு தீபாராதனை காட்டி வழிபட்டார். இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை இன்று வெளியிட்டார் மோடி.
துணை பெயர்கள் மற்றும் பட்டப்பெயர்கள் கொண்டு நாணயங்களை வெளியிட்ட பெருமை ராஜேந்திர சோழனுக்கு உண்டு. பல்லாயிரம் பொன் நாணயங்களை வெளியிட்ட பேரரசரை சிறப்பிக்கும் வகையில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட்டது. சோழர்களை பெருமைப்படுத்தும் வகையில் பறைசாற்றி நிற்கும்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு சார்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், சிதம்பரம் எம்.பி திருமாவளவன் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் பங்கேற்றனர். பிரதமர் மோடிக்கு கவர்னர் ஆர் எம் ரவி வருகையை சிறப்பிக்கும் வகையில் பரிசு ஒன்றினை அளித்துள்ளார்.