கனடா: காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதற்கு மே 7ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதிகள் என 9 பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் அழித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில் 4 நாட்களுக்கு மோதல் ஏற்பட்டது. பிரமோஸ் ஏவுகணை வைத்து பாகிஸ்தானை தாக்கியதில் இந்தியாவிடம் சரணடைந்த நிலையில் கடந்த 10 தேதி மோதல் நிறுத்தப்பட்டது. போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் பேட்டியளித்தது சர்ச்சையை கிளப்பியது.
மேலும், இந்தியா பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை நிறுத்தி விடுவேன் என்றும், சண்டையை நிறுத்தாவிடின் வர்த்தக போர் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக போரானது நிறுத்தப்பட்டது என்று பெருமிதம் கொண்டிருந்தார் ட்ரம்ப்.ஜி 7 மாநாட்டின் போது மோடி மற்றும் ட்ரம்புக்கு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் டிரம்ப் முன்னதாகவே புறப்பட்டு சென்றுள்ளார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர் 35 நிமிடங்களாக உரையாடினர். அதில் பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு டிரம்ப் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவின் நடவடிக்கை துல்லியமானதாக இருந்தது என்றும் கூறியிருந்தார். பாகிஸ்தானில் இருந்து எந்த ஒரு தாக்குதலையும் இந்தியா சமாளிக்கும். மேலும், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் பிரதமர் மோடி ட்ரம்பிடம் தெரிவித்தது ஆகியவற்றை பற்றி உரையாடியதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார். ஆபரேஷன் சித்தூர் நடவடிக்கையின் மூலம் மட்டுமே பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்தால் மட்டுமே மோதல் கைவிடப்பட்டது என்று மோடி ட்ரம்பிடம் கூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு, அமெரிக்கா ஆதரவு முழுமையாக இருக்கும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும், ஈரான்-இஸ்ரேல் மோதல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதல் ஆகியவற்றை குறித்தும் விவாதித்தனர். QUAD உச்சி மாநாட்டிற்கு வருவதற்கான அழைப்பை மோடி டிரம்புக்கு விடுத்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரை இன்று மதிய விருந்துக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.