3 நாடுகளின் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி திரும்பினார் மோடி!!  

Modi returned to Delhi!
புதுடெல்லி: அரசு முறை பயணமாக மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் இந்திய பிரதமர் மோடி. மூன்று நாடுகளின் பயணம் நிறைவடைந்த நிலையில் நேற்று டெல்லி திரும்பினார் நரேந்திர மோடி. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 3 நாடுகளான சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி கடந்த ஜூன் மாதம்  15ஆம் தேதி சைப்ரஸ் நாட்டிற்கு சென்றார். அங்கு சைப்ரஸ் நாட்டு அதிபர் கிறிஸ்ட்டோடவுலிட்சை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து கனடா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார் மோடி.
ஜூன் பதினெட்டாம் தேதி கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி 7 உச்சி மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்காக கனடா சென்றார். கனடாவின் ஜி 7 மாநாட்டின் அழைப்பிற்கு அழைப்பு விடுத்ததன் காரணமாக மோடி சென்றார். நேற்று முன்தினம் நடந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் கன்னட பிரதமர், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாட்டின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
அதில் இத்தாலி பிரதமர் மெலோனி மோடியை சந்தித்து பேசிய போது, “நீங்கதான் பெஸ்ட் உங்களை போல் நானும் மாறி வருகிறேன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார். பதிலுக்கு தனது மகிழ்ச்சியையும் தெரிவித்தார் மோடி. மெலோனி மற்றும் மோடி சந்திப்பு வைரலாகி வந்தது. கனட பயணத்தை முடித்து குரோஷியா சென்றார்.
குரோஷியாவின் அந்நாட்டு அதிபர் சோரன் மெலானாவ்  மற்றும் பிரதமர் பிளன்கோவிக்கை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளில் அரசு முறை பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நேற்று பிற்பகல் புதுடெல்லிக்கு வந்தடைந்தார்.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram