ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு நாளை மோடி வருகை!! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு!! 

Modi to visit Himachal Pradesh
சண்டிகார்: இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில் சாட்டிலைட் பியாஸ் போன்ற ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டதால் வெள்ளக்கார காட்சியளிக்கிறது தாழ்வான பகுதிகள். தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் இதுவரை 46 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும், 1.75 லட்சம் ஹெக்டருக்கு அதிகமான பரப்பு வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு குழு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி நாளை பஞ்சாபில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளார். இது குறித்து தகவலை பஞ்சாப் பாஜக தலைவர் சுனில் ஜாக்கர் தெரிவித்துள்ளார்.
பார்வையிட்டு பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்வதன் கள நிலவரம் குறித்தும் நிவாரண நிதிகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப்புக்கு இரண்டு மத்திய குழு வருகை தர உள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்திலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக கொட்டித் தீர்க்கும் கனமழையால் நிலச்சரிவு வெள்ளப்பெருக்கு மற்றும் மேக வெடிப்பு போன்றவை ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 366 என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு சொத்துக்களில் 46 கோடி மற்றும் தனியார் சொத்துக்களில் 67 கோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
3390 வீடுகள் மற்றும் 40 குடிசைகள் நிலச்சரிவுகளில் சேதமடைந்துள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 1,464 கால்நடைகள் மற்றும் 26, 955 பண்ணை பறவைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பிரதமர் மோடி நாளை இமாச்சலப் பிரதேசத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவி வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram