கிரிக்கெட்: நேற்று நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் லக்னோ இரு அணிகள் இடையே போட்டிக்கு பின் ஒரே அணியில் இருந்து ஆரஞ்சு கேப் மற்றும் பர்பிள் கேப் வைத்துள்ளனர்.
நேற்று ஐபிஎல் தொடரின் ஏழாவது போட்டி லக்னோ மற்றும் ஹைதராபாத் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பதற்கு முன் பலரும் ஹைதராபாத் அணி லக்னோ அணிக்கு எதிராக 300 பிளஸ் ரன்களை அடிக்கும் என பல கருத்துக்கள் கூறிவந்த நிலையில் அவ்வாறு ஏதும் நடைபெறாமல் முதலில் பேட்டிங் செய்து ஹைதராபாத் அணி 190 ரண்களில் சுருண்டது. அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 17 வது ஓவரில் ஆட்டத்தை முடித்து வைத்தது.
ஐபிஎல் தொடரை பொருத்தவரை ஆரஞ்சு கேப் என்பது அதிக ரன்கள் தொடரில் எடுத்தவர்களுக்கு வழங்கப்படுவதாகும் பர்பிள் கேப் என்பது அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கு கொடுக்கப்படுவதாகும். இந்த இரண்டு கேப்புகளும் லக்னோ அணி வீரர்களே தன்வசம் வைத்துள்ளனர். முதலில் லக்னோ அனி பந்து வீசியபோது ஷர்த்துள் தாக்கூர் அபாரமான பந்துவீச்சு வெளிப்படுத்தி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவர் முதல் போட்டியில் இரண்டு விக்கெட் இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகள் என மொத்தம் ஆறு விக்கெடுகள் வீழ்த்தி பர்பில் கேப்பினை தன்வசமாக்கினார். நிக்கோலஸ் பூரன் முதல் போட்டியில் 76 ரன்கள் மற்றும் ஹைதராபாத் அணி உடனான போட்டியில் 70 ரன்கள் என மொத்தம் 146 ரன்கள் அடித்து அதிக ரன் அடித்த ஆரஞ்சு கேப்பை தன்வசமாக்கினார். தற்போது இரண்டு கேப்புகளும் ஒரே அணியில் உள்ள வீரர்களுக்கு சொந்தமாகி உள்ளது இனிவரும் போட்டிகளில் யாருக்கு மாறும் என்பதை பார்க்கலாம்.