ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த டிரைவர் குமரேசன் இவர் வயது 50 அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்திருந்தார். இந்த மாணவி அரசு பள்ளியில் 9 ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தப் பெண் வீட்டில் தனியாக இருக்கும்போது லாரி டிரைவர் குமரேசன் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனைப் பற்றி அந்த மாணவி தனது ஆசிரியரிடம் தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு ஒருவர் கொடுக்கிறார் என்று கூறியிருக்கிறார். உடனே அந்த ஆசிரியர் அவரது தந்தையை தொலைபேசியில் அழைத்து அந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமையே அவரிடம் கூறினார்.
இதனைக் கேட்ட அந்த மாணவியின் தந்தை குழந்தைகள் உதவி மையத்துக்கு தொடர்பு கொண்டு புகாரை தெரிவித்தார். இதன் அடிப்படையில் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு புகாரை அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து விசாரணை மேற்கண்ட மகளிர் போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்த லாரி டிரைவரை போக்ஸோ மற்றும் கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவின் கீழ் கைது செய்தனர். லாரி டிரைவர் குமரேசனை விசாரித்தபோது அந்தப் பெண்ணின் தாய்க்கும் குமரேசனுக்கும் தொடர்பு இருந்தது தெரிவந்துள்ளது.
அந்தப் பெண்ணின் தாயே தன்னுடைய மகளை அந்த டிரைவருக்கு பலாத்காரம் செய்ய அனுமதி அளித்துள்ளார். மேலும் தாயும் கண்முன்னே அந்த பெண்ணே பலாத்காரம் செய்துள்ளார் குமரேசன். மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று அந்த பெண்ணை எச்சரித்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் தாயையும் போக்ஸோ பிரிவின்கில் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது