கிரிக்கெட்: மும்பை மற்றும் கொல்கத்தா இடையிலான நேற்று நடைபெற்ற போட்டியில் புதிய வீரராக களம் இறங்கிய அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அபார பந்துவீச்சினை வெளிப்படுத்தினார்.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 12 வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா மற்றும் மும்பை இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது இந்த போட்டியில் மும்பை அணி முதலில் தாஸ் என்று பவுலிங் தேர்வு செய்தது எதனால் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரராக களம் இறங்கும் டி காக் மற்றும் சுனில் நரேன் கூட்டணி அதிரடியாக விளையாடி அணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்த்த நிலையில் சுனில் நரேன் டாக் அவுட் மற்றும் டீகாக் ஒரு ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சியை கொடுத்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய அதிரடி வீரர்களும் விக்கெட்டை இழந்து 116 ரன்னில் சுருண்டது கொல்கத்தா அணி.
இதில் அதிரடியான முக்கிய வீரர்களை புதிய வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே, ரிங்கு சிங், மணிஷ் பாண்டே, ரஸ்ஸல் என அதிரடி வீரர்களுக்கான நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அபார பந்துவீச்சு வெளிப்படுத்தினார். இதனால் பலரும் அஸ்வினி குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் புதிய வீரராக களம் இறங்குபவர்கள் தான் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை அஸ்வனி குமார் தட்டிச் சென்றார்.