மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூரியகுமார்!! ஹர்திக் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Mumbai Indians captain Suryakumar
Cricket : மார்ச் 23 அன்று சென்னை மற்றும் மும்பை இரு அணிகளும் மாத உள்ள நிலையில் முதல் போட்டியில் கேப்டனாக சூரியகுமார் களமிறங்க உள்ளார்.

இந்த வாரம் வருகிற 22 ஆம் தேதி இந்தியாவின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் மெகா தொடர் தொடங்க உள்ளது தற்போது அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களும் தங்களது அணியில் இணைந்து தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 23ஆம் தேதி அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட சென்னை அணியும் மும்பை அணியும் மோதிக்கொள்ள உள்ளது.

இன்று இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் நொடிப்பொழுதில் அனைத்தும் விற்று தீர்ந்து சாதனை படைத்துள்ளது மேலும் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. கடந்தாண்டு கேப்டனாக பந்து வீசும் நேரம் குறித்த நேரத்தை விட அதிகமாக பயன்படுத்தியதால் முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியது.

எனவே 23ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை மற்றும் மும்பை அணி இடையிலான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் விளையாட உள்ளார் என தற்போது ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram