மும்பை பங்குச்சந்தை நிலவரம்!! ஏற்றத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் குறியீடு!! 

Mumbai Stock Exchange Situation

மும்பை: மும்பையில் பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை தொடங்கியது. பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு ஏற்றத்துடன் தொடக்கப்பட்டது. தொடக்கத்தில் 200 க்கு மேற்பட்ட புள்ளிகள் அதிகரித்து 80,932 புள்ளிகளாக காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை நிப்டி குறியீடு ஆனது 100க்கும் மேற்பட்ட புள்ளிகள் அதிகரித்து 24,808.40 புள்ளியாக காணப்பட்டது. பங்குச்சந்தையில் டைட்டன் சன் பார்மா பாரதி ஏர்டெல் ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ட்ரெண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் டாட்டா ஸ்டீல் ,மகேந்திரா அண்டு மகேந்திரா, அதானி போர்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் பங்குச்சந்தைகளில் லாபத்துடன் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிலவரப்படி நிப்டி 0.26 சதவீதம் லாபத்துடன் இருந்தது. உலோக பிரிவானது 1% க்கும் அதிகமான லாபத்துடன் காணப்பட்டது.
மேலும், நடுத்தர சிறு சுகாதார நலப் பிரிவில் 0.53% நஷ்டத்துடன் இருந்தது. வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கட்கிழமை) மும்பை பங்குச் சந்தைகளில் வர்த்தகம்  ஏற்றத்துடன் காணப்பட்டது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு ஏற்றத்துடன் இன்று காலையில் தொடங்கியது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram